குவைத்தில் தொழிலாளர் கொடுரமாக தாக்கப்பட்ட சம்பவம்;குவைத் குடிமகனுக்கு 17 வருட சிறை தண்டனை;
குவைத்தில் கடந்த 2017 டிசம்பர் மாதத்தில் தொழிலாளர் ஒருவர் கருணையே இல்லாமல் கொடுரமாக தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்பான வழக்கில்.குவைத் குற்றவியல் நீதிமன்றம் இன்று இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.இந்த சம்பவம் குறித்து அந்த நேரத்தில் குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் இடையில் பரவலாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.இதை அப்படி யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.
குவைத்தில் Al-Shuwaikh பகுதியில் உள்ள மோட்டார்கள் பழுதுபார்க்கும் கடையில் வேலை பார்த்து வந்த எகிப்து நாட்டைச் சேர்ந்த தொழிலாளி வாகீத் முஹம்மது அல்-ரிஃபாய் ஹாசன் என்ற நபரை அந்த கடைக்கு வாடிக்கையாளராக வந்த குவைத் குடிமகன் முகம் மற்றும் கழுத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொடுரமாக தாக்கினான்.பின்னர் கீழை விழுந்த அவரை
காலில் அணிந்திருந்த ஷூவை கொண்டு பல முறை முகத்தில் எட்டி உதைத்தான்.இதையடுத்து உயிருக்கு ஆபத்தை நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதில் அவருடைய முகம் மற்றும் கழுத்து பகுதிகள் பலத்த சேதமடைந்தது. இதையடுத்து வெளியான சிசிடிவி கேமரா காட்சிகள் காட்டுத் தீ போல் சமூக வலைதளங்களில் பரவியது.சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து சம்மந்தப்பட்ட நபரை குவைத் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
குவைத்தில் உள்ள எகிப்து தூதரக அதிகாரிகள் இந்த பிரச்சினையில் துரிதமாக செயல்பட்டனர்.மற்றும் இரண்டு நாட்களின் வெளியுறவுத் துறை வரையில் இந்த பிரச்சினை சென்றது.எகிப்து வெளியுறவுத் துறை அமைச்சர் பாதிக்கப்பட்ட நபரை அந்த நேரத்தில் மருத்துவமனைக்கு வந்து நேரில் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து அவன் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று முடிந்தது குறிப்பிடத்தக்கது.இதையடுத்து இந்த வழக்கில் குவைத் குற்றவியல் நீதிமன்றம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
சம்மந்தப்பட்ட குற்றவாளிக்கு 17 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Reporting by Kuwait tamil pasanga team.