BREAKING NEWS
latest

Friday, July 26, 2019

சிங்கப்பூரில் இன்று நடந்த ஆசியா கோப்பை டி-20 தகுதி சுற்று போட்டியில் குவைத் கத்தாரை 10 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது:

சிங்கப்பூரில் இன்று நடந்த ஆசியா கோப்பை டி-20 தகுதி சுற்று போட்டியில் குவைத் கத்தாரை 10 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது:

2020 ஆண்டு ஐசிசி டி -20 உலகக் கோப்பை ஆசியா இறுதிப் போட்டில் கீழ் இன்று வெள்ளிக்கிழமை நடந்த ஆட்டத்தில் குவைத் 10 ரன்கள் வித்தியாசத்தில் கத்தார் அணியை வீழ்த்தியது.இந்த போட்டி சிங்கப்பூரில் உள்ள இந்திய சங்க கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது வருகிறது.

டாஸ் இழந்த பின்னர் கத்தார் பந்துவீச்சை தேர்ந்தெடுத்து,இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த குவைத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மொத்தம் 197 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகளை இழந்தது.குவைத்திற்காக அதிகபட்சமாக Adanan Aedis 56 ரன்களும்,Mit Bhawasar 35 ரன்ணும், Usman Waheed 28 ரன்ணும் எடுத்தார்.கத்தார் சார்பில் பந்துவீச்சிய Tamor Sajjad மற்றும்  Iqbal Hussein தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து 198 ரன்கள் வெற்றி இலக்குடன் இறங்கி கத்தார் 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.கத்தார் அணிக்காக Tamor Sajjad அதிகபட்சமாக‌ 46 ரன்கள் எடுத்தார்.மேலும் Noman Shanwar 34 ரன்ணும்,Inam-ul Haq 28 ரன்ணும் மற்றும் Faisal Haved 25 ரன்ணும் எடுத்தார்.குவைத்திற்காக Shiraj Khan மற்றும் Janadu Hamoud தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த தகுதி சுற்று போட்டியில் கடந்த 22 துவங்கியுள்ளது 28 வரையில் நடைபெறும் சிங்கப்பூர், குவைத், மலேசியா, நேபாளம் மற்றும் கத்தார் மோதி வருகிறது.இன்றைய போட்டியில் கத்தார் தோல்வியை தழுவியதால்,போட்டி அட்டவணையில் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோற்றது கட்சி இடத்தில் உள்ளது.

இதுவரையில் நடந்த போட்டியின் வெற்றி அடிப்படையில் புள்ளிவிவர பட்டியலில் சிங்கப்பூர் முதலிலும், குவைத் இரண்டாவது இடத்திலும், மலேசியா மூன்றாவது இடத்திலும் உள்ளது,மேலும் நேபாளம், கத்தார் கடைசி இரண்டு இடங்களில் உள்ளது. நாளைய போட்டியில் நேபாளம் குழைந்தை எதிர்கொள்ளும்.

அமீரகத்தில் வருகிற அக்டோபர் மற்றும் நவம்பரில் Round-Robin முறையில் 14 அணிகள் மோதும் இதில் வெற்றிபெறும் அணி,அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஐ.சி.சி டி 20 ஆண்கள் உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Reporting by Kuwait tamil pasanga team.

















Add your comments to சிங்கப்பூரில் இன்று நடந்த ஆசியா கோப்பை டி-20 தகுதி சுற்று போட்டியில் குவைத் கத்தாரை 10 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது:

« PREV
NEXT »