குவைத்தில் ஓட்டுநராக வந்து,கடந்த 20 ஆண்டுகளில் விடாமுயற்சி மூலம் தமிழன் ஒருவரின் சாதனை நேற்று பிரம்மாண்டமான நிகழ்ச்சியாக நடைபெற்றது:
சிறுக சிறுக இன்று ஆலமரம் போல் தழைத்து அனைவருக்கும் உதவிடும்
அந்த நிறுவனம் தான் TVS கார்கோ நிறுவனம் என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இதையடுத்து அடுத்து டிராவல்ஸ் துறையில் அடியெடுத்து வைத்தார். அதுவும் குவைத்தில் நம்பர் ஒன் நிறுவனம் என பெயரை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடிமட்டத்தில் இருந்து வளர்ந்து இன்று தொழிலதிபராக வெற்றிபெற்ற அவருக்கு, துபாயில் உள்ள ஒரு அமெரிக்க நிறுவனம் டாக்டர் பட்டம் கொடுத்தது கவுரவித்து. குவைத்தில் செயல்படும் ஒட்டுமொத்த இந்தியா,இலங்கை,நேபாளம் ஆகிய நாடுகளின் அமைப்புகளுக்கு உதவுவதில் கொடைவள்ளலாக திகழ்ந்து வருகிறார். அது மட்டுமல்ல ஊரில் பல்வேறு சமூக மனித நேயப் பணிகளையும் TVS அறக்கட்டளை சார்பாக செய்து வருகிறார்.
இந்நிலையில் ஏதேனும் பெரிதாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் பல வருடங்களாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலையில்(25.07.2019) அன்று 20 ஆண்டுக்கான மாபெரும் தொழிலாளர்களின் திருவிழாவை குவைத்தில் நடத்தினார் டாக்டர் S.M.ஹைதர் அலி அவர்கள். தனது TVS கார்கோ நிறுவனத்தில் அதிக வருடம் பணியாற்றி வரும் நான்கு தொழிலாளர்களுக்கு தலா 5 இலட்சத்திற்கான காசோலைகளை அவர்கள் வழங்கினார்
இந்த நிறுவன வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி டிவிஎஸ் கார்கோ மேலாளராக பணிபுரியும் ஆரிப் அவர்களுக்கு டிவிஎஸ் குழுமத்தின் கார்கோ வளர்ச்சிக்கு காரணமாக திகழ்ந்த அவரை பெருமைபடுத்தும் விதமாய் 2019 மாடல் பார்ச்சூனர் காரை பரிசளித்துள்ளார் அலி அவர்கள், மேலும் சுமார் 150 கற்கும் மேற்பட்ட சக ஊழியர்கள் அனைவரும் பெருமதிப்பிலான தங்க நாணயங்களை டிவிஎஸ் குழுமத்தின் சேர்மன் ஹைதர் அலி அவர்கள் பரிசாக வழங்கினார். இறுதியில் டிவிஎஸ் நிறுவனம் தயாரித்த முகில் கிரியேஷன்ஸ் சார்பாக இயக்குனர் ஆர்.ரஷித் அவர்களால் உருவான "பஞ்ச கவிஞன்" என்ற குறும்படத்தை அலி அவர்கள் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியை திரு.கங்கை கோபால் மற்றும் திரு.வெங்கட் மதி ஆகியோர் சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள்
நிகழ்ச்சியில் ஏராளமான தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள்,மற்ற பல நிறுவனங்களின் பிரதிநிதிகள்,பத்திரிக்கியாளர்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வருகைதந்த அனைவருக்கும் இரவு உணவு வழங்கி அலி அவர்கள் சிறப்பாக உபசரிக்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து வீட்டு வேலைக்கு வந்தவர் இன்று பல நூறு தொழிலாளர்களுக்கு வேலை வழங்கி தொழிலதிபர் ஆனது நிச்சயம் ஒரு பிரம்மிப்பு தான்.
Editor: ktpnews Official