குவைத்தில் குடும்பத்துடன் வசிக்கும் 21-வயது நிரம்பிய வெளிநாட்டினர் நபர்கள் இனிமுதல் நேரடியாக தொழில்விசாவுக்கு மாறலாம்:
குவைத்தில் இந்தியா,இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் ஆயிரக்கணக்கில் குடும்ப விசாவில்(Family Visa) குடும்பத்தினருடன் பல வருடங்களாக வேலை காரணமாக தொடர்ந்து வசித்து வருகிறார்கள். இவர்களில் 21-வயது நிரம்பிய தங்கள் குழந்தைகள் குவைத்தில் வேலை வாய்ப்பு பெறுவது இனிமுதல் எளிதாக இருக்கும் என்ற மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.
சாதாரண குவைத்தில் குடும்பத்துடன் வசிக்கும் வெளிநாட்டினர் குழந்தைகள் 1 முதல் 12 வரையிலான பள்ளிப் படிப்புகளை பெரும்பாலும் குவைத்திலேயே முடிப்பார்கள். அதன்பிறகு கல்லுரி மேற்படிப்புக்காக தங்கள் தாய் நாடுகளுக்கு செல்வார்கள். இப்படிப்பட்ட குழந்தைகள் வேலை வாய்புக்காக WorkVisa-வில் புதிதாக மீண்டும் குவைத்திற்கு வரவேண்டிய நிலை இதுவரையில் இருந்துவந்தது.இதனால் காலதாமதம் மற்றும் பல்வேறு பிரச்சனைகளையும் அவர்கள் சந்திக்க வேண்டியிருந்தது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் குவைத் உள்துறை அமைச்சகம் குவைத் தொழிலாளர் துறை அமைச்சகத்துக்கு புதிய உத்தரவு பிறப்பித்தது பச்சைக்கொடி காட்டியுள்ளது. அதாவது குடும்பத்துடன் வசிக்கும் நபர்களில் 21-வயது நிரம்பிய தங்கள் குழந்தைகளின் குடும்ப விசாவை எந்த தடையும் இன்றி நேரடியாக தொழில் விசாவாக(Workvisa) மாற்றிக் கொள்ளலாம்.இதன் மூலம் தாயகம் சென்று மீண்டும் வேலைக்காக புதிய தொழில் விசாவில் வரவேண்டும் என்ற சட்டத்தை ரத்து செய்துள்ளது.
குடும்ப விசாவில் உள்ள 21 வயது நிரம்பிய எந்த ஒரு நபரும் குடும்பவிசா 22-ஐ (Article-22),தொழில் விசா 18-ஆக(Article-18) நேரடியாக எந்த தடையுமின்றி மாற்றலாம்.இதன் மூலம் இப்படிப்பட்ட நபர்கள் வேலை வாய்ப்பு பெறுவதற்கு வீணடிக்கப்படும் நேரம் மிச்சமாகும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்.
Reporting by Kuwait tamil pasanga team.