BREAKING NEWS
latest

Sunday, July 7, 2019

குவைத்தில் சாலை விபத்தில் கடந்த வருடம் 263 பேர் உயிரிழந்தனர் என்று செய்திகள் தெரிவிக்கிறது:


குவைத்தில் சாலை விபத்தில் கடந்த வருடம் 263 பேர் உயிரிழந்தனர் என்று செய்திகள் தெரிவிக்கிறது:

குவைத்தில் கடந ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் 263 பேர் உயிரிழந்துள்ளனர் என்று குவைத் நீதித்துறை அமைச்சகத்தின் புள்ளிவிபர கணக்குகள் தெரிவிக்கிறது.இது கடந்த 2017 ஆம் ஆண்டை விடவும் 4% சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் கணக்குகள் மேலும் தெரிவிக்கின்றன. இந்த தகவலை குவைத்தின் தினசரி நாளிதழ் Al-Rai பத்திரிக்கையை செய்தியை மேற்கோள் காட்டி குவைத் தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் Ahmadi முதலிடத்தில் உள்ளது 86 உயிரிழப்புகள்,இதுபோல் இறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது நாட்டின் தலைநகரம் 13 உயிரிழப்புகள்.கடந்த 2017 ஆம் ஆண்டு 17,271 போக்குவரத்து விதிமுறை மீறல் வழக்குகள் பதிவாகியுள்ளன.இதில் 5,574 வழக்குகள் ரத்து செய்யப்பட்டது.இதுபோல் 2018 ஆம் ஆண்டு 11,697 வழக்குகள் பதிவாகியுள்ளன என்றும் செய்திகள் தெரிவிக்கிறது.

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வழக்குகளில் நீதிமன்றம் 4,584 வழக்குகள் வாதத்திற்கு எடுத்ததில் Ahamdi  கவர்னேட்டில்  அதிகபட்சமாக 1,355 வழக்குகள்) பதிவு செய்யப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன,அதே நேரத்தில் தலைநகரம் 202 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.

இந்த காலகட்டத்தில் 300 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் மற்றும் 263 நபர்கள் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது‌‌.அதே காலகட்டத்தில் 488,778 தினார்களை அபராதமும் வசூலிக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.கடந்த டிசம்பர் மாதத்தில்தான் அதிகபட்சமாக போக்குவரத்து விதிமுறை மீறல் வழக்குகள் பதிவாகியுள்ளன 1576 வழக்குகள், அதுபோல் மிகவும் குறைவாக ஜனவரி மாதத்தில் 20 வழக்குகள் பதிவாகியுள்ளன.

Reporting by Kuwait tamil pasanga team.





Add your comments to குவைத்தில் சாலை விபத்தில் கடந்த வருடம் 263 பேர் உயிரிழந்தனர் என்று செய்திகள் தெரிவிக்கிறது:

« PREV
NEXT »