டெல்லியிலிருந்து லண்டனுக்கு 40,000 அடி உயரத்தில் ,4,000 மைல்கள் விமான சக்கர பகுதியில் திருட்டுத்தனமாக பயணித்த இந்தியர்:
லண்டனின் ஹித்ரூ விமான நிலையம் நோக்கி பயணம் செய்த கென்யா விமானத்தின் சக்கர பகுதியில் திருத்தமாக பயணித்த பயணி விமானம் தரையிறங்க 3000 அடி உயரத்தில் சக்கரங்களை கீழை இறக்கும் போது விழுந்தது பலியான சம்பவம் பற்றி செய்தி பக்கத்தில் பதிவு செய்தோம்.
இதை பலரும் நம்பவில்லை,எப்படி பயணம் செய்ய முடியும் என்று சிலருக்கு, ஆச்சரியம் இப்படி பல கேள்விகள்.... ஆம் முடியும் என்று இந்தியர் ஒருவர் பயணம் செய்தார். உயிர் தப்பினார் இப்போது லண்டனில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றார்.
ஆம் இது 1996 ஆம் ஆண்டு சுமார் 23 வருடங்களுக்கு முன்பு நடந்தது அந்த காலத்தில் இணையம் என்ற ஒன்று இல்லாததால் பலருக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.மேல் குறிப்பிட்ட செய்தி வெளியானது முதல் என்னுடைய பல தேடுதலுக்கு பிறகு இந்த செய்தியை முதல் முறையாக உங்களுக்கு குவைத் தமிழ் பசங்க தளம் தமிழில் பதிவு செய்கிறது.
ஆம் 1996 ஆம் ஆண்டு டெல்லியிலிருந்து லண்டன் புறப்பட்ட போயிங் 747 விமானத்தில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த
மெக்கானிக் பிரதீப் ஷானி(22-வயது)என்ற அந்த #இளைஞர் (அந்த காலத்தில் 😝😝) தன்னுடைய தம்பி விஜய் (18-வயது) இருவரும் சக்கர பகுதியில் மறைந்து பயணம் செய்தனர்.டெல்லியிலிருந்து லண்டனுக்கு 40,000 அடி உயரத்தில்,4,000 மைல் விமான சக்கர பகுதியில் திருத்தமாக இவர்கள் பயணம் செய்தனர். -60° செல்சியஸ் வெப்பநிலையில் சுயநினைவை இழந்தார்.உடன் பணம் செய்த தம்பி விஜய் இதை தாக்குப் பிடிக்காமல் உயிரிழந்தது பாதிவழியில் கீழே விழுந்தார்.
மெக்கானிக் பிரதீப் ஷானி(22-வயது)என்ற அந்த #இளைஞர் (அந்த காலத்தில் 😝😝) தன்னுடைய தம்பி விஜய் (18-வயது) இருவரும் சக்கர பகுதியில் மறைந்து பயணம் செய்தனர்.டெல்லியிலிருந்து லண்டனுக்கு 40,000 அடி உயரத்தில்,4,000 மைல் விமான சக்கர பகுதியில் திருத்தமாக இவர்கள் பயணம் செய்தனர். -60° செல்சியஸ் வெப்பநிலையில் சுயநினைவை இழந்தார்.உடன் பணம் செய்த தம்பி விஜய் இதை தாக்குப் பிடிக்காமல் உயிரிழந்தது பாதிவழியில் கீழே விழுந்தார்.
லண்டன் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது அவருடைய உடலில் உயிரின் ஒருதுளி மட்டுமே மிஞ்சியது.இதை பார்த்த விமான நிலைய ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிருடன் இருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர். ஆம் ஆச்சரியம் மட்டுமல்ல இன்றுவரையிலும் அது அதிசயமே.....
கடந்த வாரம் நடந்த நிகழ்வு பத்திரிக்கைகள் மற்றும் செய்திகளில் உலகளவில் சர்ச்சைக்குரிய செய்தியான நிலையில் இது குறித்து பத்திரிக்கையாளர் ஒருவர் அவரை சந்தித்து பேட்டி எடுத்துள்ளனர்.அபோது அவர் அதை குறித்து நினைக்க விரும்பவில்லை என்று அவர் தெரிவித்தார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
தற்போது பிரதீப் ஹித்ரூ விமான நிலையத்தில் உணவக பிரிவில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். அவருக்கு அந்த நாட்டின் குடியுரிமையை வழங்கப்பட்டது.மனைவி மற்றும் இரண்டு குழந்தையுடன் வசித்து வருகிறார்.
தன்னுடைய தம்பியின் இறப்பு தன்னுடைய மரணம் வரையில் காயமாக மனதில் இருக்கும் என்று கண்ணீர் சிந்த தெரிவித்துள்ளார்.இவருடை தம்பி விஜயும் லண்டனில் இவருடன் தரையிறங்க வேண்டியவர், ஆனால் தெற்கு லண்டனின் றிஜ்மன் வரையில் வரும்போது குளிரில் தாக்காமல் அவர் மரணமடைந்து கீழே விழுந்தார்.பிரதீப் வழங்கி தகவல் அடிப்படையில் 5 நாட்களுக்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்டது.
அவர் மேலும் கூறுகையில் ஒரு கடத்தல் கும்பலின் தலைவன் அவர்கள் விமானத்தின் முன் சக்கரத்தின் உள்ளே ஏறுவதற்கு உதவியதாக அவர் நினைவு கூறியுள்ளார். விமானம் பறந்து மேலெழுந்து சிறிது நேரத்தில் மயக்க நிலைக்கு சென்றதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுபோன்று திருட்டுத்தனமாக விமானத்தில் பயணம் செய்து கீழே விழுந்தது இறப்பது இது முதல் முறையல்ல கடந்த 2015 ஆம் ஆண்டு ஜோகன்னஸ்பர்கில் இருந்து பிரிட்டீஸ் ஏர்வேஸில் வந்த இருவர் லண்டனின் ரிச்மண்ட் பகுதியில் கீழே விழுந்து உயிரிழந்தனர்.2012 ஆம் ஆண்டு , கேப்டவுணில் இருந்து வந்த விமானத்தில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்தார்.
குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்
Reporting by Kuwait tamil pasanga team.