அமீரகத்தில் பக்ரீத் பண்டிகை விடுமுறைகள் அதிகாரபூர்வமாக அறிவிப்பு;5 நாட்கள் தொடர் விடுமுறையாக இருக்கும்:
அமீரகத்தில் இந்த வருடத்தின் பக்ரீத் பண்டிகை(தியாகத் திருநாள்) விடுமுறை நேற்று அரசு சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அரசு அறிவித்துள்ள 4 நாட்கள் விடுமுறை மற்றும் வெள்ளிக்கிழமை சேர்த்து இந்த வருடம் 5 நாட்கள் தொடர் விடுமுறையாக இருக்கும். இதனால் தொழிலாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியான உள்ளனர்.
அடுத்த மாதம் ஆகஸ்ட் 10 முதல் 13(சனிக்கிழமை முதல் செவ்வாய்) வரையில் 4 நாட்களுக்கு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இது அரசு துறை மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த அனைவருக்கும் பொருந்தும்.9-ஆம் தேதி வெள்ளிக்கிழமை சேர்த்து இந்த வருடம் அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் 5 நாட்கள் தொடர் விடுமுறையாக இருக்கும்.பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு துபாய்,அபுதாபி உள்ளிட்ட அமீரகத்தின் அனைத்து தலைவர்களும் மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் அரசு விடுமுறைகள் ஒரே மாதிரி வழங்கும் ஒருங்கிணைந்த
புதிய விதிமுறை நடைமுறை(அமலுக்கு) வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது.இறைவனின் தூதரான இப்றாகீம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் இது கடைபிடிக்கப்படுகிறது.
குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்
Reporting by Kuwait tamil pasanga team.