BREAKING NEWS
latest

Thursday, July 11, 2019

அபுதாபி போக்குவரத்து துறை போலீசார் எச்சரிக்கை இதை செய்தால் 500 திர்ஹம் அபராதம் மற்றும் 4 கருப்பு புள்ளிகள் வழங்கப்படும்:


அபுதாபி போக்குவரத்து துறை போலீசார் எச்சரிக்கை இதை செய்தால் 500 திர்ஹம் அபராதம் மற்றும் 4 கருப்பு புள்ளிகள் வழங்கப்படும்:

அபுதாபி போக்குவரத்து துறை சார்பில் அதிகாரபூர்வமாக தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் தங்கள் வாகனங்களில் காலாவதியான டயர்களை தங்கள் வாகனங்களில்  பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்டால் 500 திர்ஹம் அபராதமும், 4 கருப்பு புள்ளிகளும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஜனவரி முதல் ஜூன் வரை 7 விபத்துகள் டயர் வெடித்ததால் நடந்துள்ளது என்றும்,இருவர் உயிரிழந்துள்ளனர் என்று கூறி உள்ளனர் இதே காலகட்டத்தில் டயர்கள் சேதமடைந்த அல்லது காலாவதியான வாகனங்களுக்கு அபுதாபியில் 5,376 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களை தவறாமல் பரிசோதிக்கவும், காற்று அழுத்தத்தை சரிபார்க்கவும், தங்கள் கார்கள் சோதனை செய்து கொள்ளுமாறு போலீசார் வாகன ஓட்டிகளை கேட்டுக்கொண்டனர், ஏதேனும் சேதங்கள் அல்லது விரிசல்கள் இருந்தால் கடுமையான போக்குவரத்து விபத்துக்களுக்கு வழிவகுக்கும், மேலும் கடுமையான காயங்கள் மற்றும் மரணங்கள் கூட ஏற்படக்கூடும் என்று அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளன.

பொருத்தமற்ற டயர்களைக் கொண்டு வாகனம் ஓட்டுவது ஆபத்தானது, குறிப்பாக கோடை மாதங்களில் வெப்பநிலை கிட்டத்தட்ட 50°C வரை உயரக்கூடும் என்று போலீசார் மேலும் வலியுறுத்தினர்.

Reporting by Kuwait tamil pasanga team.

Add your comments to அபுதாபி போக்குவரத்து துறை போலீசார் எச்சரிக்கை இதை செய்தால் 500 திர்ஹம் அபராதம் மற்றும் 4 கருப்பு புள்ளிகள் வழங்கப்படும்:

« PREV
NEXT »