BREAKING NEWS
latest

Thursday, July 11, 2019

குவைத்தில் கடந்த 6 ஆண்டுகளில் 36,000 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டனர் என்று செய்திகள் தெரிவிக்கிறது:


குவைத்தில் கடந்த 6 ஆண்டுகளில் 36,000 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டனர் என்று செய்திகள் தெரிவிக்கிறது:

குவைத்தில் கடந்த 6 ஆண்டுகளில் அதாவது 2013 முதல் 2019 வரை 14,8000  வெளிநாட்டினர் நாடுகடத்தப்பட்டனர் குவைத் உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையே மேற்கோள்காட்டி குவைத்தின் பிரபல பத்திரிக்கை Al-Anba தினசரி நாளிதழ் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.மேலும் நாடுகடத்தப்பட்ட நபர்களில் 36,000 பேர் இந்தியர்கள் என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடுகடத்தப்பட்ட நபர்களில் குடியிருப்பு சட்டங்கள் மற்றும் தொழிலாளர் சட்டங்களை மீறுபவர்கள்,குற்றவாளிகள்,போக்குவரத்து சட்டங்களை மீறியவர்கள் உள்ளிட்டவை பல்வேறு குற்றங்களில் சிக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடுகடத்தப்பட்டவர்களில் ஆண்கள் 88,000 மற்றும் பெண்கள் 60,000 ஆகவும் உள்ளனர். பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கையை நாடுகடத்தப்பட்டவர்களில் அதிகம். நாடுகடத்தப்பட்ட ஆண்களில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர் 29,000 ஆண்கள்,குவைத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ள வெளிநாட்டு மக்கள் இந்தியர்கள் ஆவார்கள் அதாவது 10,00000 ற்கும் அதிகமானவர்கள் குவைத்தில் வேலை செய்து வருகிறார்கள்.

மேலும் நாடுகடத்தப்பட்ட நபர்களில் எகிப்தியர்கள் 16,000 ஆண்கள் பங்களாதேஷ் ஆண்கள் 14,000,இலங்கை மற்றும் நேபாள் ஆண்கள் சேர்த்து 5,000, எத்தியோப்பியர்கள் 4,000 ஆண்கள், பிலிப்பைன்ஸ் ஆண்கள் 1,700 மற்றும்  வெவ்வேறு தேசங்களைச் சேர்ந்தவர்கள் சிறிய அளவில்.

இதுபோல் பெண்களில் எத்தியோப்பியர்கள் 14,000, பிலிப்பைன்ஸ் 13,500ஆயிரம், இலங்கையர்கள் 12,000, இந்தியர்கள் 7,000, நேபாளம் 5,000, எகிப்தியர்கள் 400, பங்களாதேஷ் 200 மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் சிறிய அளவில்.

Report by Kuwait tamil pasanga team.

Add your comments to குவைத்தில் கடந்த 6 ஆண்டுகளில் 36,000 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டனர் என்று செய்திகள் தெரிவிக்கிறது:

« PREV
NEXT »