குவைத்தில் கடந்த 6 மாதங்களில் 69,000 ற்கும் மேற்பட்ட வீட்டுத் தொழிலாளர்கள்(Domestic Work) புதிதாக வருகை தந்துள்ளனர் என்றும்,இதனால் குவைத்தில் நிலவிவந்த வீட்டுத் தொழிலாளர்கள் தட்டுபாடு ஒரளவு சரியாகி வருகிறது என்று உள்துறை அமைச்சகம் தகவல்கள் தெரிவிக்கின்றன.இது குவைத்தில் வேலை செய்யும் வீட்டுத் தொழிலாளரில் 9% சதவீதமாகும்.
நிலுவையில் இலங்கை, இந்தியா, நேபாளம், பிலிப்பைன்ஸ், எகிப்து உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் குவைத்தில் வீட்டுத் தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.ஜுன்,30 வரையில் உள்ள கணக்குகளின் படி குவைத்தில் 7,18000 ஆயிரமாயிரம் பேர் வீீட்டுத் தொழிலாளர்கள் குவைத்தில் வேலை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இது குவைத்தில் வேலை செய்யும் வெளிநாட்டு தொழிலாளர்களில் 31 சதவீதம் ஆகும்.அதே நேரத்தில் மக்கள் தொகை கட்டுப்பாடு நடைமுறையில் கொண்டுவரும் நோக்குடன் வெளிநாட்டு தொழிலாளர்கள் குறைப்பு மறுபுறம் நடைபெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும்,வீட்டுத் தொழிலாளர்கள் தட்டுப்பாடு குவைத்திகள் மத்தியில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.குவைத்தில் வீட்டுத் தொழிலாளர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்று தொடர் புகார்கள் அடிப்படையில் சில நாடுகள் தடை விதித்தும்,மற்றும் கடுமையான ஒப்பந்த விதிமுறைகளை அறிவித்தும் குவைத்தில் வீட்டுத் தொழிலாளர்கள் வேலைக்கு வருவது கடந்த சில ஆண்டுகளாக குறைந்த அளவிலேயே உள்ளது.
இதையடுத்து புதிதாக தொழிலாளர்களை தேர்வு செய்ய (Requirement) நாடுகளை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் குவைத் அரசு சார்பில் நடைபெற்று வருகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த 3 வருடங்களில் 65,521 பேர் வீட்டுத் தொழிலாளர்களாக வேலை வந்து ஒப்பந்தம் முடிந்த நிலையில் தாயகம் திரும்பினர் என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reporting by Kuwait tamil pasanga Team.