BREAKING NEWS
latest

Wednesday, July 3, 2019

குவைத்தில் குடும்பத்தினர் வசிக்கும் பகுதியில் இருந்து இளைஞர்களை(Bachelors) வெளியெற்றும் நடவடிக்கை தீவிரம்:

குவைத்தில் குடும்பத்தினர் வசிக்கும் பகுதியில் இருந்து இளைஞர்களை(Bachelors) வெளியெற்றும்  நடவடிக்கை தீவிரம்:
குவைத்தில் குடும்பத்தினர் வசிக்கும் பகுதியில் இருந்து இளைஞர்களை வெளியேறும் நடவடிக்கை ஜூலை 1 முதல் துவங்கியுள்ளது.இதற்காக முதல்கட்டமாக பல்வேறு நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்துள்ளனர்.முதல்கட்டமாக குவைத்தின் அனைத்து முக்கியமான பகுதிகளில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் 124 விளம்பரங்கள் பலகைகளை அதிகாரிகள் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் வைத்தனர்.
மேலும் சோதனைகளை செய்ய சிறப்பு குழுவினரை அதிகாரிகள் நியமித்துள்ளனர்.நாடு முழுவதும் குடும்பத்தினர் வசிக்கும் பகுதியில் தங்கியுள்ள இளைஞர்களை(Bachelors) கண்டறியும் நடவடிக்கைகள் இறுதிகட்டத்தில் உள்ளது என்று நகராட்சி தலைமை அதிகாரி
முகமது-அல்-முத்தேரி தெரிவித்துள்ளார். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் முழுவதும் சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் இந்த காலகட்டத்தில் குவைத் முழுவதிலும் குடும்பத்தினர் வசிக்கும் பகுதியில் தங்கியுள்ள வெளிநாட்டு இளைஞர்களை(Bachelors) வெளியெற்றப்படுவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குவைத்தில் வரும் நாட்களில் சோதனைகள் மிகவும் தீவிரமாக இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.குவைத்தில் உள்ள 6 மாகாணங்களுக்கும் விழிப்புணர்வு விளம்பரங்கள் பிரசுரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.இதில் இளைஞர்கள் குடும்பத்தினர் வசிக்கும் பகுதியிலிருந்து வெளியேறவும் உரிமையாளர் இப்படி தங்கியுள்ள நபர்களை வெளியேற்றவும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.
மேலும் குடும்பத்தினர் வசிக்கும் பகுதியில் இளைஞர்கள் தங்கியுள்ளது உங்கள் கவனத்திற்கு வந்தால் 139 என்ற இலவச எண்ணில் அழைத்தோ அல்லது நகராட்சியின் அதிகாரபூர்வ இணையத்தளம் வழியாக புகார் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று நடத்திய சோதனையில் 14 எச்சரிக்கை கடிதங்களை வழங்கியுள்ளனர்.
இந்த சோதனை Rabia, Andalous, Khaitan, Omariya மற்றும் Firdous பகுதியில் நடந்துள்ளது.மின்இணைப்பு மற்றும் தண்ணீர் இணைப்பு ஆகியவை துண்டிக்கப்பட்டது.இன்று இந்த சோதனை Fahaheel மற்றும் Daiya பகுதியில் நடந்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.வரும் நாட்களில் இந்த சோதனைகள் கடுமையாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Reporting by Kuwait tamil pasanga team.

Add your comments to குவைத்தில் குடும்பத்தினர் வசிக்கும் பகுதியில் இருந்து இளைஞர்களை(Bachelors) வெளியெற்றும் நடவடிக்கை தீவிரம்:

« PREV
NEXT »