குவைத்தில் வேலை செய்துவந்த இந்திய தமிழகத்தைச் சேர்ந்த நபர் நேற்று (02/07/19) செவ்வாய்க்கிழமை திடிரென்று மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது.
அவர் பெயர் ஹாஜாமைதீன்(வயது-48),நாகப்பட்டினம் மாவட்டம், நீடூர்,292/4 மாத கோவில் தெருவைச் சேர்ந்த ஆவார்.இவருடைய தந்தை பெயர் அப்துல் மஜீத் என்பதாகும்.
ஹாஜாமைதீன் குவைத்தின் சர்க் பகுதியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்த நிலையில் தீடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
ஹாஜாமைதீன் அவர்களின் உடலை குவைத் சட்டநடவடிக்கை முடித்த பின்னர் குவைத்தில் உள்ள சுலைபிகாத் பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யபடும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பணிகளை குவைத்தில் உள்ள இரண்டு தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்து செய்து வருகிறார்கள் என்று செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reporting by Kuwait tamil pasanga team.