BREAKING NEWS
latest

Wednesday, July 10, 2019

குவைத்தில் தமிழர் ஒருவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது:


குவைத்தில் தமிழர் ஒருவர்  உடல்நலக்குறைவால் மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது:
குவைத்தில் வேலை செய்துவந்த இந்திய தமிழகம் வேலூரை மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ்பாபு(வயது-51) குவைத்தில் உள்ள Al-Adan மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று(09 /07 /2019) செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த 20 ஆண்டுகாலமாக குவைத்தில் Equate என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் சமூக ஆர்வலர், அடுத்தவர்களுக்கு தெரியாமல் பிறருக்கு உதவி செய்பவர்.கடந்த 2007-ஆம் ஆண்டிலிருந்து குவைத்தில் உள்ள தமிழ் அமைப்பான குவைத் தமிழ்ச்சங்கத்தில் இணைந்து செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இவருக்கு சுதா என்ற மனைவியும் அரவிந்த்,அஸ்வின் என்ற இரு மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில் இன்று புதன்கிழமை(10/07/2019) குவைத்திலுள்ள Sabah மருத்துவமனையில் வைத்து அவருடைய நண்பர்கள் மற்றும் தமிழ் உறவுகள் இறுதி அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு மதியம் 1:30 முதல் 2:30 வரையில் நடைபெறும்.

மேலும் குவைத் சட்டநடவடிக்கை முடித்து அவரது உடல் இன்று புதன்கிழமை இரவு 8:30 மணிக்கு Emirates விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது என்றும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாளை 11/07/2019 காலையில் சென்னையிலிருந்து சாலை மார்க்கமாக அவரது சொந்த ஊரான வேலூருக்கு உடல் எடுத்துச் செல்லப்படுகிறது.

Reporting by Kuwait tamil pasanga team.

Add your comments to குவைத்தில் தமிழர் ஒருவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது:

« PREV
NEXT »