BREAKING NEWS
latest

Tuesday, July 16, 2019

குவைத்தில் சித்திரவதை செய்யப்பட்ட இலங்கைப் பெண் அணிந்திருந்த ஆடையுடன் தாயகம் திரும்பிய துயரமான செய்தி வெளியாகியுள்ளது:

குவைத்தில் சித்திரவதை செய்யப்பட்ட இலங்கைப் பெண் அணிந்திருந்த ஆடையுடன் தாயகம் திரும்பிய துயரமான செய்தி வெளியாகியுள்ளது:


குவைத்தில் பணிப் பெண்ணாக வேலைக்கு வந்த பல இன்னல்களை சந்தித்த 4 குழந்தைகளின் தாய் நாடு திரும்பியதாக அந்நாட்டு செய்தி தளங்கள் செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கையின் எஹெலியகொட பிரசேத்தைச் சேர்ந்த 4 குழந்தைகளின் தாய் (வயது-49) மாரிமுத்து சுலோச்சனா என்பவரே இவ்வாறு நாடு திரும்பியுள்ளார்.

இது குறித்து அந்த பெண்மணி கூறியதாவது

இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பன்  மட்டுமே உண்பதற்கு கொடுக்கப்பட்டதுடன் தினமும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அணிந்திருந்த ஆடையுடன் நேற்று முன்தினம் 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இலங்கையை சென்றடைந்தார் என்றும், இலங்கை வெளிநாடு வேலை வாய்ப்பு பணியகம் சார்பில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் தன்னுடைய பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகவும் அவர்களின் திருமணச் செலவுக்கு பணத்தை சேர்ப்பதற்காக இரண்டு வருடங்களுக்கு முன்னர் குவைத்துக்கு வீட்டு பணிப் பெண்ணாக வந்துள்ளார்.

குவைத்தில் ஜஹரா என்ற பகுதியில் ஆசிரியர் ஒருவரின் வீட்டுக்கே இவர் பணிப்பெண்ணாக வந்துள்ளார்.ஆசிரியரின் மனைவியால் இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை பன் மாத்திரமே உணவாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கடுமையான சித்திரவதைகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார்.அதிக பசி ஏற்படும் பட்சத்தில் உணவு கேட்கும் போது குறித்த பெண் சுலோசனாவை செருப்பால் தாக்கியுள்ளார்.

இவ்வாறு தாக்கியதால் ஏற்பட்ட காயங்கள் இன்னும் சுலோச்சனாவின் உடல் முழுவதும் உள்ளது குறிப்பிடத்தக்கது என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add your comments to குவைத்தில் சித்திரவதை செய்யப்பட்ட இலங்கைப் பெண் அணிந்திருந்த ஆடையுடன் தாயகம் திரும்பிய துயரமான செய்தி வெளியாகியுள்ளது:

« PREV
NEXT »