குவைத்தில் விசா புதுப்பித்தலுக்கு முன்புள்ள மருத்து காப்பீட்டுத் தொகை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த திட்டம் நடைமுறையில் வருகிறது:
குவைத்தில் வெளிநாட்டினர் எந்த துறையில் வேலை செய்தாலும் விசா தேவையாகும்.அதுபோல் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு முக்கியமாக மருத்துவ காப்பீடு ( Medical Insurance) தேவை.இந்த மருந்து காப்பீடு ஒவ்வொரு முறையும் விசா(Work permit) புதுப்பித்தல் செய்யும் நேரத்தில் புதுப்பித்தல் செய்ய வேண்டும். அப்படியானால் மட்டுமே புதிய விசா அடிக்கமுடியும்.
விசா புதுப்பித்தலுக்கு முன்பு மருத்து காப்பீட்டுத் தொகை நேரடியாக சம்மந்தப்பட்ட இன்சூரன்ஸ் அலுவலகத்தில் செலுத்தும் நடைமுறையில் தற்போது வரையில் நடைமுறையில் உள்ளது.இதில் சிறிய மாற்றம் வருகிறது அதாவது வருகிற ஜூலை-28,2019 முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே இந்த மருந்து காப்பீட்டு தொகையை செலுத்த முடியும்.
இன்சூரன்ஸ் தொகை ஆன்லைன் மூலம் செலுத்தும் நடைமுறை கடந்த ஜனவரி-1,2019 முதல் நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.இருந்தாலும் பழைய நடைமுறையும் பின்பற்றப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. இதனால் ஜூன்-28 முதல் இது முழுக்க முழுக்க ஆன்லைன் முறைக்கு மாறுகிறது.
இதற்காக சுகாதார துறை புதியதாக அறிமுகம் செய்துள்ள INS Online என்ற இணையதளம் மூலம் இன்சூரன்ஸ் அலுவலகத்திற்கு நேரடியாக செல்லாமல். இந்த இணையதளம் மூலம் இன்சூரன்ஸ் கட்டண தொகை இனிமுதல் செலுத்தி இன்சூரன்ஸ் நடவடிக்கைகள் எளிதாக பூர்த்தி செய்ய முடியும்.
அரசு துறை தொழிலாளர்கள், தனியார் துறை தொழிலாளர்கள், வீட்டுத் தொழிலாளர்கள் மற்றும் குடும்ப விசாவில் உள்ள நபர்கள் உள்ளிட்ட அனைத்து பகிர்வு விசாவில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இனிமுதல் இன்சூரன்ஸ் தொகை இதன் வழியாக எளிதாக செலுத்த முடியும்.இந்த செய்தியை குவைத்தன் பிரபல தினசரி நாளிதழ் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் இன்சூரன்ஸ் தொகை செலுத்தும் இணைய தளத்தின் முகவரி: http://insonline.moh.gov.logaction/insurance/kw
குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்.
Reporting by Kuwait tamil pasanga team