BREAKING NEWS
latest

Friday, July 19, 2019

குவைத் போலீஸ் சீருடையில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை அச்சுறுத்தி பணம் பறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

குவைத் போலீஸ் சீருடையில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை அச்சுறுத்தி பணம் பறித்த நபர் கைது செய்யப்பட்டார்.


குவைத்தில் குவைத் காவலர் சீருடையில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் சோதனை என்ற பெயரில் மிரட்டி பணம் பறித்த Moi தடயவியல் பிரிவில் வேலை செய்துவந்த ஊழியரை அதிகாரிகள் கைது செய்தனர்.குடியிருப்பு பகுதிகளுக்கு அடிக்கடி வருவதை பார்த்து சந்தேகமடைந்த சிலர் ஃபர்வானியா காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.பிறகு சந்தேக நபரை காவல்துறை கைது செய்தது என்று அதிகாரபூர்வ செய்தியை மேற்கோள் காட்டி Al-Anba தினசரி நாளிதழ் உள்ளிட்ட பல செய்தித் தளங்கள் செய்தி வெளியாகியுள்ளது.

காவல்துறை விசாரணையில் வெளிநாட்டினர் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் வேலைவாய்ப்பு ஆவணங்கள்(சிவில் ஐடி) உள்ளிட்டவையை
சரிபார்பதாக கூறி நாடுகடத்தல் மற்றும் கைது செய்து சிறையில் அடைப்பதாக மிரட்டிய குற்றத்தில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார்.

அவன் இதுபோல் டஜன் கணக்கான அரேபிய மற்றும் ஆசியா வெளிநாட்டினரை ஏமாற்றியுள்ளார்.பணம்,விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடித்தல் மற்றும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் வழக்கு பதிவு செய்து இரகசிய பிரிவு அதிகாரிகளிடம் அவனை ஒப்படைத்தனர்.எனவே குவைத்தில் வசிக்கும் இந்திய இலங்கை உறவுகள் இதுபோன்ற போலி நபர்களை நம்பி பணத்தை இழந்து ஏமாற வேண்டாம்.மிகவும் சாதுர்யமாக செயல்படுங்கள்.

Add your comments to குவைத் போலீஸ் சீருடையில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை அச்சுறுத்தி பணம் பறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

« PREV
NEXT »