BREAKING NEWS
latest

Wednesday, July 3, 2019

குவைத்தில் வீட்டுத் தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் முதலாளிகளை கறுப்புப்பட்டியலில் சேர்க்க நடவடிக்கை:

குவைத்தில் வீட்டுத் தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் முதலாளிகளை கறுப்புப்பட்டியலில் சேர்க்க நடவடிக்கை:

குவைத்தில் தனியார் துறையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் மற்றும் துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொடர்ந்து புகார் வந்தால் அந்த நிறுவனங்களை கறுப்புப்பட்டியலில் சேர்த்து அந்த நிறுவனங்கள் தொடர்ந்து இயக்க முடியாதபடி குவைத் தொழிற்துறை அமைச்சகம் கறுப்புப்பட்டியலில் சேர்க்கும்.இப்படி நூற்றுக்கணக்கான கம்பெனிகளின் ஆவணங்கள் அரசு ரத்து செய்துள்ளது.

இதுபோல் குவைத்தில் வேலை செய்யும் வீட்டுத் தொழிலாளர்களின்(Domestic workers) உரிமைகளை பறிக்கும் முதலாளிகளை(Sponsor) கருப்புப் பட்டியல் சேர்க்க குவைத் தொழிலாளர் துறை அமைச்சகம் நடவடிக்கைகள் துவங்கியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.வீட்டுத் தொழிலாளர்களிடம் இருந்து தொடர்பு புகார்கள் வருவதால் இந்த புதிய நடவடிக்கைகள் துவங்கியுள்ளதாக தெரிகிறது.குவைத்தின் பிரபல தினசரி நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தொழிலாளர் துறை அமைச்சக இயக்குநர் ஜெனரல் அஹ்மத்-அல்-முசா இதை தெரிவித்துள்ளார்.

வீட்டுத் தொழிலாளர்களிடம் இருந்து சம்பளம் வழங்காத புகார்கள், துன்புறுத்தல் புகார்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட புகார்கள் தினசரி அதிகரிக்கும் நிலையில் இதை அமல்படுத்த ஆலோசனை நடைபெற்று வருகிறது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.ஒரே முதலாளிகளின்(Sponsor) பெயரில் 7ழும் 8ட்டும் முறை தொடர்ந்து புகார்கள் வரும் நிலை ஏற்படுகிறது.இப்படிபட்ட முதலாளிகள் தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து வரவது முறையல்ல என்பதால் கறுப்புப்பட்டியலில் சேர்க்கும் புதிய நடவடிக்கைக்கு ஆலோசனை செய்யப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்படி தொடர்ந்து புகார் வரும் முதலாளிகளையும்( Sponsor) மற்றும் தொழிலாளர்களை அழைத்து வரும்  ஏஜென்சிகளையும்(Recruitment Agency)
கருப்புப் பட்டியல் சேர்க்க தொழிலாளர்கள் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அவர் பேட்டியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளார்.


Reporting by Kuwait tamil pasanga team.








Add your comments to குவைத்தில் வீட்டுத் தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் முதலாளிகளை கறுப்புப்பட்டியலில் சேர்க்க நடவடிக்கை:

« PREV
NEXT »