BREAKING NEWS
latest

Monday, July 22, 2019

குவைத்திற்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேபாளம் நாட்டிலிருந்து..... வீட்டுத் தொழிலாளர் வருகை,புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது:

குவைத்திற்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேபாளம் நாட்டிலிருந்து..... வீட்டுத் தொழிலாளர் வருகை,புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது:


குவைத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வீட்டுத் பணிப் பெண்களாக நேபாளம் நாட்டிலிருந்து தொழிலாளர்களை அழைத்து வர புதிய ஒப்பந்தம் குவைத்திலுள்ள நேபாள  தூதரகத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது என்று வீட்டுத் தொழிலாளர் அமைப்பின் தலைவர் காலீத் அல் நகீயான் தெரிவித்துள்ளார் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, பிலிப்பைன்ஸ், இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் சட்டபடி வீட்டுத் தொழிலாளை அழைத்துவர நிபந்தனைகள் கடுமையாக்கிய நிலையில் குவைத்தில் நிலவிவரும் வீட்டுத் தொழிலாளர் தட்டுபாட்டை குறைக்க இது உதவும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசு சார்ந்த ஒப்பந்தம் கையெழுத்தானதும் தாமதிக்காமல் தொழிலாளர்கள் வருகை துவங்கும் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
நேபாளம், இலங்கை மற்றும் வங்காளதேச நாடுகளிலிருந்து வீட்டுத் தொழிலாளர் அழைத்துவர குவைத் அரசு சார்பில் முன்னரே முயற்சிகள் துவங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலிருந்து யாரு வந்தால் அரசு அனுமதி பெற்ற ஏஜென்சிகள் மற்றும் குவைத் இந்திய தூதரகத்தின் ஒப்பந்த கடிதம் உள்ளிட்ட அனைத்தும் சரியாக இருந்தால் மட்டுமே வாருங்கள்.வருவதற்கு முன்பு அந்த ஆவணங்களை சரிபாருங்கள்.போலியான ஒப்பந்த கடிதங்களை கொடுத்து ஏமாற்றுபவர்கள்

போலியான ஏஜென்சிகள் மற்றும் இடைத்தரகர்களை ஆசை வார்த்தைகளை
நம்பி ஒப்பந்த கடிதம் எது இல்லாமல் வந்தால் சந்திக்கும் பிரச்சினை நீங்களே அனுபவிக்க வேண்டியது இருக்கும்.

Reporting by Kuwait tamil pasanga team.

Add your comments to குவைத்திற்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேபாளம் நாட்டிலிருந்து..... வீட்டுத் தொழிலாளர் வருகை,புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது:

« PREV
NEXT »