BREAKING NEWS
latest

Tuesday, July 23, 2019

அமீரகத்தில் வேலைக்கு செல்லும் நபரா நீங்கள்....????உங்களுக்கு இனிமேல் போலியான விசா கொடுத்து யாரும் ஏமாற்ற முடியாது:


அமீரகத்தில் வேலைக்கு செல்லும் நபரா நீங்கள்....????உங்களுக்கு இனிமேல் போலியான விசா கொடுத்து யாரும் ஏமாற்ற முடியாது:

அமீரகத்தில் துபாய்,ஷார்ஜா உள்ளிட்ட பல பகுதிகளில் வேலைக்கு அழைத்து வரும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் சுற்றுலா விசா மற்றும் போலியான விசாக்களை போலியான ஏஜென்சிகள் மற்றும் இடைத்தரகர்களை கொடுத்து தொடர்ந்து ஏமாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

இதில் கடந்த இரண்டு மாதங்களில் சமூக வலைத்தளங்கள் மற்றும் வாட்சப் உள்ளிட்டவை வழியாக அதிக அளவில் ஆசை வார்த்தைகள் மற்றும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலமும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் ஏமாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதில் கேரளா,தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பல சகோதரர்கள் ஏமாற்றப்பட்டு பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டு மீட்கப்பட்ட நிலையில் தங்கள் நாடுகளுக்கு வேலை வரும் வெளிநாட்டு தொழிலாளர்களை யாரும் போலியான விசாக்களை கொடுத்து ஏமாற்றமல் இருக்க யாருடைய உதவியும் இன்றி உங்களுக்கு வழங்கப்படும் விசாவில் உண்மை நிலையை நீங்களே நேரடியாக சோதனை செய்யவும் வகையில் அமீரக அரசு புதிய தளத்தை அறிமுகம் செய்துள்ளது.

விசாவின் உண்மை நிலையை வெளிநாட்டினர் அமீரக அரசு அறிமுகம் செய்துள்ள இணையதளம் மூலமும் மற்றும் கைபேசி பதிவிறக்கம் செய்யும் Application-ஐ பயன்படுத்தியும் எளிதாக அறிந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்காக இணைய தளத்தின் Link பின்வருமாறு:

www.amer.ae


இந்த Link-ஐ Click செய்து இணையதளத்தில் முதலில் Open செய்ய வேண்டும்.பின்னர் Visa enquiry என்ற பகுதியை Click செய்ய வேண்டும்,அந்த பக்கம் Open செய்ய வேண்டும் பின்னர்:

1) உங்களுக்கு அமீரகம் செல்வதற்கு அனுமதி வழங்கிய ஏஜென்சி வழங்கிய விசாவில் உள்ள விசா எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

2) பாஸ்போர்ட்டில் உள்ள பெயர்

3) உங்கள் பாஸ்போர்ட் உள்ள பிறந்த தேதி

4) உங்கள் தாய்நாடு(இந்தியா என்றால் இந்தியா இலங்கை என்றால் இலங்கை) ஆகியவை பதிவு செய்து Submit பட்டனை அழுத்த வேண்டும்.

அடுத்த நோடியில் உங்கள் விசா போலியான அல்லது உண்மையான விசாவா என்பதை அறிய முடியும்.உண்மையான விசாவாக இருந்தால் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது அதே விசாவில் நகல் அந்த திரையில் தெரியும்.மேலும் Issue தேதி மற்றும் காலாவதி தேதி ஆகியவையும் அந்த திரையில் தெரியும்.அதே சமையம் விசா போலியாக இருந்தால் Dismatch என்று திரையில் தெரியும்.

மேலும் Emigration Amer சென்டர், டஸ்கீர் சென்டர் மற்றும் அங்கீகாரம் பெற்ற Typing சென்டர் ஆகியவை வழியாகவும் உங்கள் வசாவின் உண்மை நிலையை சோதனை செய்ய முடியும்.

வெளிநாட்டினர் அமீரகத்தில் வேலைக்கோ அல்லது சுற்றுலாவுக்கோ வருவதற்கு முன்பு விசாவில் உண்மை நிலையை கண்டிப்பாக சோதனை செய்து உறுதி செய்துக் கொள்ள வேண்டும் என்றும், சமூக வலைத்தளங்கள் வழியாக உள்ள விசா வியாபாரத்தில் சிக்கி ஏமாற கூடாது என்று அமீரக அரசு எச்சரிக்கை செய்துள்ளது.

குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்(Please News Don't Copy Shareall & Support our Page)

Reporting by Kuwait tamil pasanga team

Add your comments to அமீரகத்தில் வேலைக்கு செல்லும் நபரா நீங்கள்....????உங்களுக்கு இனிமேல் போலியான விசா கொடுத்து யாரும் ஏமாற்ற முடியாது:

« PREV
NEXT »