குவைத்தில் வேலை செய்துவந்த இந்திய தமிழகத்தைச் சேர்ந்த நபர் தற்கொலை என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது.
- தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுக்காவில் ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்த விஜி என்கிற விஜயகுமார்(வயது38) குவைத்தில் டிரைவராக தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார்.இந்நிலையில் நேற்று மத்தியானம் Mahabula பகுதியில் உள்ள தன்னுடைய தங்கும் விடுதிகளில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தகவல் கிடைத்தது விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இவர் குவைத்தில் Subway கம்பெனியில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.விஜிக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.முதல்கட்ட தகவல்படி கடந்த சில நாட்களாக விஜி மனகஷ்டத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மதியானம் இந்த துயரமான முடிவை விஜயகுமார்
எடுத்துள்ளது,உடன் வேலை செய்யும் நண்பர்களை பெரும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.குவைத் சட்டநடவடிக்கைகள் முடிந்து உடலை விரைவாக தாயகம் அனுப்பும் பணிகளை,அவர் வேலை செய்த கம்பெனியின் நிர்வாகம் செய்து வருகிறது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஓரிரு நாட்களில் அவர் உடல் தாயகம் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிகிறது.
Reporting by Kuwait tamil pasanga team.