BREAKING NEWS
latest

Friday, July 26, 2019

குவைத் வானிலை இன்று படுமோசமான உள்ளது;வானிலை மையம் இதையடுத்து பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது

குவைத் வானிலை இன்று படுமோசமான உள்ளது;வானிலை மையம் இதையடுத்து பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது

குவைத்தில் இன்று பலத்த தூசிக்காற்று வீசிய வண்ணமே உள்ளது.பல பகுதியில் சாலைகள் மற்றும் நடைபாதைகள் தெரியாத அளவுக்கு பலத்த தூசிக்காற்று வீசுகிறது. இதுபோல் வெப்பநிலை சில பகுதிகளில் அதிகபட்சமாக 50°C வரையில் நிலவும் என்றும் தெரிகிறது.

இதையடுத்து குவைத்தில் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை காற்றின் வேகம் மணிக்கு 70 km/h இருக்கும் என்றும்,கடலில் அலைகள் 7 அடிவரையில் பயங்கரமாக
எழும்பும் எனவும், மேலும் ‌தூரப்பார்வை 1000 மீட்டருக்கு குறைவாக இருக்கும் என்று அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல் குவைத் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை அவசரகால உதவிக்கு 112 எண்ணில் தொடர்பு கொள்ளவும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் தீயணைப்பு துறையை 1804000 என்ற எண்ணிலும், கடலோர காவல் படையை 1880888 என்னும் தொடர்புக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Reporting by Kuwait tamil pasanga team.

Add your comments to குவைத் வானிலை இன்று படுமோசமான உள்ளது;வானிலை மையம் இதையடுத்து பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது

« PREV
NEXT »