குவைத் கிரிக்கெட் அணிக்காக சிங்கப்பூரில் நாளை கத்தார் அணிக்கு எதிராக சர்வதேச போட்டிகளில் விளையாடும் தமிழனை வாழ்த்துவோம்:
குவைத் மற்றும் கத்தார் அணிகள் மோதும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை வெள்ளிக்கிழமை (26-07-2019) சிங்கப்பூரில் உள்ள இந்தியன் அசோசியேசன் மைதானத்தில் நடைப்பெற உள்ளது.இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த சங்கர் வர்தப்பன் குவைத் கிரிக்கெட் அணிக்காக 5-வதாக களமிறங்கிய விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.நாம் அனைவரும் வாழ்த்துவோம்.
சங்கர் வர்தப்பன் கடந்தது வந்த பாதை குறித்த தொகுப்பு:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த பாச்சல் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் வரதப்பன்(வயது-27).நெசவாளரின் மகனான இவர், 10-ஆம் வகுப்புக்கு பிறகு படிப்பை நிறுத்திவிட்டு, நூற்பு ஆலைக்கு வேலைக்குபோகும் நிலைக்கு தள்ளப்பட்டவர் சங்கர் வரதப்பன். அவர் இந்த நிலைக்கு முன்னேறி இருப்பதுதான் ஆச்சரியம். அவர் தன் படிப்பை தொடர காரணமாக இருந்தவர் அவரது சகோதரர் பெரியசாமி.
இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட வேண்டும் என்ற கனவோடு நான்காம் வகுப்பு படிக்கும்போதே பயிற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். முதல்தலைமுறை பொறியியல் பட்டதாரியான ஆவார்.பள்ளியில் படிக்கும்போதே கிரிக்கெட்டில் பங்கேற்ற இவர், பொறியியல் படிக்கும்போது, மாவட்ட போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தினார்.
வேலை நிமித்தமாக முதலில் துபாய் சென்ற சங்கர்.இதன் பின்னர் குடும்பத்தின் விருப்பத்தையும் மீறி அவர் காதல் திருமணம் செய்துக்கொண்டார்.குடும்பத்துக்கான கடமைகள், பணிகள் இவற்றுக்கிடையிலும் கிரிக்கெட் மீது அவருக்கு இருந்த உணர்வு குறையவே இல்லை.இந்நிலையில் குவைத்தில் உள்ள என்.பி.டி.சி., நிறுவனத்தில் கடந்த 2014-ல் இருந்து, தரக்கட்டுப்பாட்டு பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்திலையில் குவைத்தில் உள்ள க்ளப் அணிகள் பாந்தேர்ஸ் மலபுரம்,கொச்சின் ஹரிகேன்ஸ், இடுக்கி ஃபீனிக்ஸ் என கேரள மாவட்டங்களின் பெயர்களில் பல உள்ளூர் அணிகள் உள்ளது.அதில் சங்கர் ராயல் கிங்ஸ் திருவனந்தபுரம் அணிக்காக விளையாடி வந்தார்.அப்போதே ராயல் கிங்ஸ் திருவனந்தபுரம் அணியில் விளையாடியபோது,வெறும் 86 போட்டிகளில் 168. 55 ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் 3, 167 ரன்கள் குவித்ததுதான் சங்கர்.மேலும் கிரிக்கெட் ஆர்வத்தை குறைத்து கொள்ளாமல், பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.அவரது ஆர்வத்தை பார்த்த என்.பி.டி.சி., நிறுவனம், தொடர்ந்து விளையாட ஊக்குவித்தது.
கடந்த, 2016ல் குவைத்தில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய சங்கர், 57 பந்துகளில், 169 ரன்களை குவித்தார். தொடர்ந்து, குவைத் லீக் போட்டிகளில் வாய்ப்பு பெற்றார். 2018, 2019ல், குவைத் தேசிய கிரிக்கெட் இயக்குனரிடம், 'பெஸ்ட் பர்பாமர்' விருது பெற்றுள்ளார்.
குவைத் தேசிய கிரிக்கெட் அணியில், பாகிஸ்தான், இலங்கை வீரர்களின் ஆதிக்கம் இருந்து வந்த நிலையில், முதன் முறையாக தமிழக வீரர் ஒருவர் இடம் பெற்றுள்ளார்.குவைத் அணியில் தொடக்க ஆட்டக்காரராக இறங்கி விளையாடி வருகிறார்.
இந்நிலையில் தற்போது கடந்த ஜூலை 22 முதல், 28 வரை, சிங்கப்பூரில், ஐ.சி.சி., டி-20 உலகக்கோப்பை ஆசிய மண்டல தகுதி இறுதி போட்டியில் நடைபெற்று வருகிறது.
நாளை வெள்ளிக்கிழமை (26-07-2019) சிங்கப்பூரில் உள்ள இந்தியன் அசோசியேசன் மைதானத்தில் குவைத் & கத்தார் மோதும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.இதில் சங்கர் விளையாடுகிறார்.அதில், குவைத் அணி வெற்றி பெற்றால்,2020ல், ஆஸ்திரேலியாவில் நடக்கும் ஐ.சி.சி., டி-20 உலக கோப்பை போட்டியில், குவைத் அணியில், துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கும் வாய்ப்பு உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டிகளில் விளையாட முயற்சித்து, சங்கர் வாய்ப்பை இழந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் துவண்டுவிடாமல் தீவிர பயிற்சியில் கவனம் செலுத்தி இந்த நிலையை அடைந்தது சாதனை படைத்துள்ளார்.
எனினும் துவண்டுவிடாமல் தீவிர பயிற்சியில் கவனம் செலுத்தி இந்த நிலையை அடைந்தது சாதனை படைத்துள்ளார்.
இப்போது சங்கர் குவைத் தேசிய அணியிலேயே இடம்பெற்றுவிட்டாலும், இன்னமும் நாமக்கல்லில் இருக்கும் அவரது மனைவி கோமதிக்கு கிரிக்கெட் பிடிப்பதேயில்லை.ஸ்கைப்பில் சங்கர் தன்னோடு பேசும் நேரத்தை கிரிக்கெட் பயிற்சி பறித்துக்கொள்கிறது என்பதே அதற்கு காரணம்.
Reporting by Kuwait tamil pasanga team.
(Note: பல தளங்களில் வந்த செய்தியை அவர் கடந்துவந்த பாதையின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளது)