அமீரகத்தில் வேலைக்கு முயற்சி செய்யுங்கள் இந்தியர்கள் யாரும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் உங்களை யாராவது தொடர்புகொண்டலோ அல்லது கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலமும் நீங்கள் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கேரளாவை சேர்ந்த 9 இளைஞர்கள் வாட்ஸ்அப் மூலம் 7000 ஆயிரம் வரையில் வழங்கி ஏமாற்றப்பட்டு அமீரகத்தில் தற்போது தவிர்த்து வருகிற சூழலில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
இந்திய தூதரகம் பலமுறை வேலை வாய்ப்புகளை தேடுபவர்களை சரியான அரசு அனுமதி பெற்ற முகவர்கள் மூலம் மட்டுமே ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருமாறு எச்சரித்துள்ளது,குடியேற்ற விதிகளை மீறக்கூடாது எனவும்,இதனால் போலி ஆட்சேர்ப்பு முகவர்களின் வலையில் விழ கூடாது என அனைத்து சமூக ஊடகங்கள் மற்றும் சேனல்கள் மூலம் இந்திய தூதரகத்தின் நடத்திய விழிப்புணர்வு இருந்தபோதிலும்,தூதரகத்திற்கு வருகிற பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஈ.சி.ஆர் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் வேலைவாய்ப்பு நோக்கத்திற்காக விசாவில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரக்கூடாது என்று நாங்கள் மீண்டும் மீண்டும் எடுத்துரைத்துள்ளோம் என்று தூதரகத்தின் அதிகாரி நவ்தீப்-சிங்-சூரி கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலை தேடும் பெண்கள் போலியான ஏஜென்சிகளை நம்பி மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்,ஏனெனில் பலர் விபச்சாரத்திற்கு தள்ளும் மோசமான முகவர்களின் கைகளில் விழுகிறார்கள். மற்றவர்கள் கடினமான சூழ்நிலைகளில் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல்களை எதிர்கொள்கின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.கடந்த மாதம் தமிழகத்தைச் சேர்ந்த 6 பெண்கள் வரையில் இதுபோல் சிக்கி மீட்டு தாயகம் அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
அமீரகத்தில் பிரச்சினையில் உள்ள இந்தியர்கள் 80046342 என்ற இந்த Hotline எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.