குவைத்தில் வேலைசெய்யும் வெளிநாட்டினர் நாட்டைவிட்டு வெளியேறுவது கடந்த சில வருடங்களில் அதிகரித்துள்ளது:
குவைத் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், குவைத் அரசின் புள்ளிவிவரத் துறையின் கணக்குப்படி இந்தியா,பிலிப்பைன்ஸ் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை சமீபத்திய மாதங்களில் வெகுவாகக் குறைந்துள்ளது.
குவைத்தில் அதிகமா வசிக்கும் வெளிநாட்டினர் பட்டியலில் முதலிடத்தில் இந்தியர்கள் உள்ளனர், எண்ணிக்கை 889,000 பேர் உள்ளனர்.இரண்டாவது இடத்தில் எகிப்து நாட்டைச சேர்ந்தவர்கள் 484,000 பேர் உள்ளனர் மற்றும் மூன்றாவது இடத்தில் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 271,000 பேர் உள்ளனர்.
மற்றும் நான்காவதுபிலிப்பைன்ஸ் நாட்டினர் உள்ளனர்.குவைத்தில் வேலை செய்யும் பிலிப்பைன்ஸ் நாட்டினரின் எண்ணிக்கை 243,400 இருந்து 216,200 ஆக குறைந்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.கடந்த 9 மாதங்களில் மட்டும் 27,000 பிலிப்பைன்ஸ் நாட்டினர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.இது அவர்கள் மொத்தத்தில் உள்ள மக்கள் தொகையில் 12 சதவீதம் ஆகும்.
வெளிநாட்டினர் குவைத்தை விட்டு வெளியேற முக்கிய காரணம் உயரும் தினசரி வாழ்க்கைச் செலவுகள்,நிலுவையில் உள்ள ஊதியங்கள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு எதிரான தினசரி வருகிற புதிய கடுமையான சட்டங்கள் போன்றவை வெளிநாட்டு தொழிலாளர்களை நாட்டை விட்டு வெளியேறச் செய்கின்றன.இதன் தாக்கத்தால் குறிப்பாக குவைத் ரியல் எஸ்டேட் துறை கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
வெளிநாட்டினர் அதிகமாக தங்கிவருகிற பல பகுதிகளில் வீடு காலியாக உள்ளது என்ற அறிவிப்பு பலகை Fahaheel முதல் Kuwaitcity வரையில் அடுக்கு மாடி குடியிருப்புகள் ஏராளமாகக் காணப்படுகின்றன என்று செய்திகள் தெரிவிக்கிறது.இந்த தகவலை குவைத் டைம்ஸ் பத்திரிகை பேட்டியில் ரியல் எஸ்டேட் யூனியன் பொதுச் செயலாளர் Al-Ghanim தெரிவித்துள்ளார்.
2018 புள்ளிவிவரங்கள் அடிப்படையில் குவைத் சந்தையில் சுமார் 400,000 குடியிருப்புகள் வாடகைக்கு விடும் நிலையில் இருந்து என்று தெரிவிக்கிறது. மேலும் பலர் குடியிருப்புகளில் தங்கியுள்ள வெளிநாட்டினர் தங்கள் குடியிருப்பின் உரிமையாளர்களிடம் வீட்டு வாடகையை குறைத்து வருகிறார்கள். குடியிருப்பில் தங்கியுள்ள வெளிநாட்டினர் வீடுகளை காலி செய்வதால் உரிமையாளர் இதற்கு ஒத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
Reporting by Kuwait tamil pasanga team.