குவைத் எல்லைப்புற வழியாக கத்தாரின் தலைநகர் Doha இருந்து பெய்ரூட்டுக்கு அந்த விமான பறந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதையடுத்து Middle East Air என்ற அந்த விமானம் இன்று சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் அவசரகால நிலையில் குவைத் சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பு அனுமதிப் பெற்று அதன் விமானி தரையிறக்கினார்.
விமானத்தின் இருந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த அந்த பெண்மணி பிரசவ வலியால் பின்புற கழிவறையில் நுழைந்தார்.
இதையடுத்து அந்த பெண்மணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.இதையடுத்து அந்த விமான பெண் ஊழியர்கள் விமானத்தில் மருத்துவர் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டனர்.அதில் அதிஷ்டவசமாக ஒருவர் இருந்தார்.
இதையடுத்து விரைந்து வந்த அவர் அந்த பெண்மணிக்கு செய்யவேண்டிய முதலுதவிகளை செய்தார் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான தரையிறங்கிய நிலையில் விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் அந்த பெண்மணிக்கு கூடுதல் மருத்துவ சிகிச்சை அளித்தனர்.
விமானத்தில் இருந்து மருத்துவர் செயலை அங்கிருந்த அனைவரும் பாராட்டினார்.தாயும் குழந்தையும் முழு ஆரோக்கியமான உள்ளனர் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து வாழ்நாள் முழுவதும் விமானத்தில் இலவசமாக பயணிக்கும் வாய்ப்பு அந்த குழந்தைக்கு கிடைத்துள்ளது.
Reporting by Kuwait tamil pasanga team.