சவுதியில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த தமிழர் உடல் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டது:
சவுதி அரேபியாவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் கிங்ஸிலின் விஜயகுமார் என்ற கன்னியாகுமரி சேர்ந்தவர் மருத்துவமனையில் இருப்பதாக அல்கசீம் மண்டல தமுமுகவிற்கு தகவல் கிடைத்துள்ளது என்று செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
அன்றுமுதல் அவரை தினமும் சென்று சந்தித்து வந்தோம் அவ்வப்போது அவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான தகவல்களை பரிமாறிக் கொண்டோம்.இரண்டு முறை அவரை தாயகம் அனுப்புவதற்கு முயன்றும்.அவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகியதால் அந்த நிலையில் அனுப்ப முடியவில்லை.இந்நிலையில் கடந்த மாதம் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே அவர் இறந்துவிட்டார்.
அவரின் உடலை தாயகம் அனுப்புவதற்காண வேலைகளை அல்கசீம் மண்டல
தமுமுக அமைப்பினர் செய்தனர். இதையடுத்து நேற்று(வியாழக்கிழமை) அவரது உடல் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டது என்று செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reporting by:அல்கசீம்மண்டலம்
சவூதி அரேபியா -தமுமுக ஊடகப்பிரிவு
தமுமுக அமைப்பினர் செய்தனர். இதையடுத்து நேற்று(வியாழக்கிழமை) அவரது உடல் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டது என்று செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reporting by:அல்கசீம்மண்டலம்
சவூதி அரேபியா -தமுமுக ஊடகப்பிரிவு