BREAKING NEWS
latest

Saturday, July 20, 2019

குவைத் வாழ் தமிழர் மும்பையில் நடந்த விழாவில் சமுக சேவைகளுக்காக இரண்டு விருதுகளை பெற்றுள்ளார்

குவைத் வாழ் தமிழர் மும்பையில் நடந்த விழாவில் சமுக சேவைகளுக்காக இரண்டு விருதுகளை பெற்றுள்ளார்:

உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்து சாதனை படைத்து வரும் சாதனையாளர்களுக்கும், பொதுச்சேவை செய்து வரும் தமிழ்ச் சங்கங்கள், நிறுவனங்களுக்கும் விருது வழங்கும் விழா மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பை வாஷி தமிழ்ச் சங்க அரங்கத்தில் ஐ.நா. சபை வாழ்த்துப் பெற்ற மக்கள் சந்திப்பு வார பத்திரிகை சார்பில் நடைப்பெற்றது.இந்த விழாவில் குவைத்தில் பல்வேறு சமூகப்பணிகளை செய்து வரும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் பொதுச்செயலாளர் பரங்கிப்பேட்டை அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ அவர்களுக்கு சேவைச் சுடர் மற்றும் பவர் ஆஃப் மும்பை விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த விழாவிற்கு மக்கள் சந்திப்பு வார பத்திரிகை ஆசிரியர் ஏ. ஹாலிது தலைமை தாங்கினார்.முன்னதாக நாசிக் தமிழ்ச் சங்கத் துணைத்தலைவரும் மக்கள் சந்திப்பு நிருபர்களான கண்ணன், சுப்பையா ஆகியோர் அதிர்ஷ்ட புறா மேடையை திறந்து வைத்தனர்.சிறப்பு தலைமை விருந்தினராக குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் பொதுச்செயலாளர் பரங்கிப்பேட்டை அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தலைமை விருந்தினர்களாக நாசிக் தமிழ்ச் சங்கத் தலைவர் இராமமூர்த்தி, வாஷி தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகி கண்ணன், ஜப்பான் தமிழ் பண்பலை தொகுப்பாளர் அழகு லட்சுமி, வாஷி கர்நாடக சங்கத்தின் செயலாளர் சுஜாதா ராவ், மலாடு தமிழர் நல சங்கத் தலைவர் லெ. பாஸ்கரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்து சாதனை படைத்து வரும் சாதனையாளர்களுக்கும், பொதுச்சேவை செய்து வரும் தமிழ்ச் சங்கங்கள் மற்றும் நிறுவனங்களுக்கும் சேவைச் சுடர் மற்றும் பவர் ஆஃப் மும்பை விருதுகள் வழங்கப்பட்டன.

 இவ்விழாவில் வாஷி தமிழ்ச் சங்க பிரதிநிதிகள், நாசிக் தமிழ்ச் சங்க பிரதிநிதிகள், கன்னடா சங்க பிரதிநிதிகள், அன்னை இல்லம் பிரதிநிதிகள் உட்பட பல சமூக தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களும் மற்றும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Add your comments to குவைத் வாழ் தமிழர் மும்பையில் நடந்த விழாவில் சமுக சேவைகளுக்காக இரண்டு விருதுகளை பெற்றுள்ளார்

« PREV
NEXT »