குவைத்தில் வெளிநாட்டினர் எந்த துறையில் வேலை செய்தாலும் விசா தேவையாகும்.அதுபோல் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு முக்கியமாக மருத்துவ காப்பீடு ( Medical Insurance) தேவை.இந்த மருந்து காப்பீடு ஒவ்வொரு முறையும் விசா(Work permit) புதுப்பித்தல் செய்யும் நேரத்தில் புதுப்பித்தல் செய்ய வேண்டும். அப்படியானால் மட்டுமே புதிய விசா அடிக்கமுடியும்.
விசா புதுப்பித்தலுக்கு முன்பு மருத்து காப்பீட்டுத் தொகை நேரடியாக சம்மந்தப்பட்ட இன்சூரன்ஸ் அலுவலகத்தில் செலுத்தும் நடைமுறையில் தற்போது வரையில் நடைமுறையில் உள்ளது.ஆனால் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை முதல் (ஜூலை-28,2019) ஆன்லைன் மூலம் மட்டுமே மருந்து காப்பீட்டு தொகையை செலுத்த முடியும். இந்த திட்டம் ஜனவரி 1,2019 அன்று அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை முதல் இது முழுக்க முழுக்க ஆன்லைன் முறைக்கு மாறுகிறது.
இதற்காக சுகாதார துறை புதியதாக அறிமுகம் செய்துள்ள INS Online என்ற இணையதளம் மூலம் இன்சூரன்ஸ் கட்டண தொகை இனிமுதல் செலுத்தி இன்சூரன்ஸ் நடவடிக்கைகள் எளிதாக பூர்த்தி செய்ய முடியும்.ஆன்லைன் மூலம் இன்சூரன்ஸ் தொகை செலுத்தும் இணைய தளத்தின் முகவரிகள்
பின்வருமாறு:
http://insonline.moh.gov.logaction/insurance/kw
https://insonline.moh.gov.kw/ Insurance/logaction
https://insonline.moh.gov.kw/Insurance/onlineLogin.jsp ;
இந்த செய்தியை குவைத்தின் பிரபலமான தினசரி நாளிதழ் Al-Anba வெளியிட்டுள்ளது.
அரசு துறை தொழிலாளர்கள், தனியார் துறை தொழிலாளர்கள், வீட்டுத் தொழிலாளர்கள் மற்றும் குடும்ப விசாவில் உள்ள நபர்கள் உள்ளிட்ட அனைத்து பகிர்வு விசாவில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இனிமுதல் இன்சூரன்ஸ் தொகை இதன் வழியாக எளிதாக செலுத்த முடியும்.இந்த செய்தியை குவைத்தன் பிரபல தினசரி நாளிதழ் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.
Reporting by Kuwait tamil pasanga team