சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 2-வது முறையாக
வெற்றி பெற்றது.நரேந்திர மோடி 2-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றார். மத்திய நிதி அமைச்சராக தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றார்.
இந்நிலையில் நடப்பு 2019-20 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.இது இவருக்கு முதல் பட்ஜெட் ஆகும்.மேலும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்குப் பிறகு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த 2-வது பெண் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்துள்ளது.
நேற்றைய பட்ஜெட்டில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் சார்ந்த அம்சங்கள் இங்கு பார்ப்போம்:
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை அரசு சார்ந்த அனைத்து சேவைகளும் முக்கியமாக தேவைப்படுகிறது.பல வருடங்களாக வெளிநாட்டுகளில் வேலை செய்வதால் பலருக்கு ஆதார் அட்டை கிடையாது.இதனால் விடுமுறையில் தாயகம் செல்லும்போது பல அரசு சார்ந்த சேவைகள் பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது.
- தற்போது வரையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) ஆதார் அட்டை பெற வேண்டுமெனில், அவர்கள் தொடர்ச்சியாக 182 நாட்கள் அல்லது பல கட்டங்களாக 12 மாதங்களுக்கு மேல் இந்தியாவில் வசித்தவராக இருக்க வேண்டும். அப்போதுதான்,ஆதாருக்கு அவர்கள் விண்ணப்பிக்க முடியும்.இந்த நடைமுறை மாற்றப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள், இனி 182 நாட்கள் காத்திருக்காமல், இந்தியா வந்த உடனேயே அவர்களுக்கு ஆதார் வழங்கப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.இதை வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஒருமனதாக வரவேற்ற அதை வேளையில் மற்றபடி வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு இந்த வருட மத்திய பட்ஜெட் ஏமாற்றம் மட்டுமே அளித்துள்ளது.
வெளிநாடுவாழ் இந்தியர்களில் தாயகம் திரும்புவோருக்கு மாற்று வாழ்வாதார வழிமுறைகள்,மறுவாழ்வு திட்டங்கள், முக்கியமான ஓட்டுரிமை உள்ளிட்ட வெளிநாட்டினர் எதிர்பார்த்த எதுவும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை இது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தூதரக ரீதியாக இந்தியா தொடர்பு கொள்ளாத நாடுகளுடன் உறவை மேற்கொள்ள எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளங்கிய சீதாராமன், தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்கள் இல்லாத நாடுகளில் அவற்றை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும், ஆப்பிரிக்கா நாடுகளில் 18 புதிய தூதரகங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய அமைச்சரவையில் வெளியுறவு துறை அமைச்சராக தமிழகத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் ஜெயசங்கர் அவர்களும் மற்றும் வெளியுறவுத் துறை இணையமைச்சராக கேரளாவைச் சேர்ந்த முரளிதரன் அவர்கள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்
Reporting by :
செய்தி தொகுப்பு Kuwait tamil pasanga team.