சவுதியில் இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவுக்குச் செல்லும் இங்கிலாந்து நாட்டவர்கள் ஒட்டகப் பாலை அருந்த வேண்டாம் என்று அந்நாடு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த வருடத்தின் ஹஜ் பெருநாள் ஆகஸ்ட் 9 முதல் 14 வரை கொண்டாடப்படுகிறது. இதற்காக உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான முஸ்லீம்கள் புனித யாத்திரையாக மெக்கா, மதீனா உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்வது வழக்கம்.
சவுதியில் இந்த வருட ஹஜ் புனித் துவங்கி நிலையில் இதுவரையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 614,918 வெளிநாட்டு யாத்திரிகர்கள் வருகை தந்துள்ளனர்.சவுதி ஜவாஜத் எனப்படும் இமிக்கிரேசன் துறை அளித்துள்ள புள்ளி விபரங்களின் படி, நேற்று (ஜூலை 22) திங்கட்கிழமை மாலை வரை மொத்தம் 614,918 ஹஜ் பயணிகள் வருகை தந்துள்ளனர்.இவர்களில் 596,719 பேர் விமானம் மூலமும், 11,551 தரைவழிப் போக்குவரத்து மூலமும், 6,648 பேர் கடல் மார்க்கமாகவும் சவுதிக்குள் வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் விலங்குகளின் கறந்த பாலில் இருந்து மெர்ஸ் எனப்படும் புதிய வைரஸ் பரவுவதாக வந்த தகவலையடுத்து சவுதி அரேபியா செல்லும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் ஒட்டகப் பாலை அப்படியே அருந்துவரைத் தவிர்க்கவேண்டும் என இங்கிலாந்து கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2012 முதல் 2 ஆயிரத்து 500 பேர் மெர்ஸ் வைரசால் பாதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 845 பேர் உயிரிழந்ததாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.