சவுதியிலிருந்து புனி ஜம்ஜம் நீரை உடைமைகளுடன் எடுத்துச் செல்லலாம்:ஏர்-இந்தியா இன்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது;
புனித ஹஜ் சீசன் துவங்கியதை அடுத்து ஜித்தா - கொச்சி (AI 964), ஜித்தா - ஹைதராபாத்/மும்பை (AI 966) ஆகிய வான் தடங்களில் இயக்கப்பட்டு வந்த விமானங்கள் ஹஜ் விமான பயணிகளுக்காக மாற்றப்பட்டு இத்தடங்களில் சிறிய ரக விமானங்கள் இயக்கப்படுவதால் இடப்பற்றாக்குறை காரணமாக செப்டம்பர் 15 ஆம் தேதி வரை இவ்விரு விமான தடங்களில் மட்டும் புனித ஜம் ஜம் நீரை எடுத்து வர தடை செய்யப்பட்டுள்ளதாகவும் என்று சில தினங்களுக்கு முன்பு ஏர்-இந்தியா அறிவிப்பு வெளியிட்டது.அதேவேளை புனித ஹஜ்ஜிற்காக இயக்கப்படும் சிறப்பு ஏர் இந்தியா விமானங்கள் மற்றும் சவுதியிலிருந்து பிற வான் தடங்களுக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்களுக்கு இத்தடை பொருந்தாது என்றும் அறிவித்திருந்தது.
இந்தசெய்தி இந்தியாவிலிருந்து ஹஜ் யாத்திரை மேற்கொண்ட யாத்திரிகர்கள் மத்தியில் கடும் #அதிதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்திலையில் சற்றுமுன் ஏற்பட்ட சிரமத்திற்கு நிறுவனம் மன்னிப்பு கோருவதாக ஏர்-இந்தியா புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது:
மேல் குறிப்பிட்ட AI966 மற்றும் AI964 தளங்களில் இயக்கப்படும் விமானங்களில் பயணிகள் ஜம் ஜம் நீர் கேன்களை தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட சாமான்களுக்கான பேக்குகளில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று தெளிவுபடுத்தும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Reporting by Kuwait tamil pasanga team.