BREAKING NEWS
latest

Friday, July 12, 2019

துபாயில் சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளுக்கு மது அருந்த இலவச அனுமதி லைசென்ஸ்: I


  • துபாயில் சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளுக்கு மது அருந்த இலவச அனுமதி லைசென்ஸ்:



துபாயில் சுற்றுலா வரும் பயணிகளுக்கு 1 மாதம்(30 நாட்கள்) செல்லுபடியாகும் விதத்தில் உள்ள இலவச லைசென்ஸ் வழங்கப்படும். இதற்காக அனுமதியை துபாய் அரசு வழங்கியுள்ளது.

முஸ்லிம் நபர்களை தவிர்த்து சுற்றுலா வரும் பயணிக்கு 21 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். இதற்காக மதுபான விற்பனை நிறுவனமான MMI யின் அதிகாரபூர்வ வலைத்தளத்தில் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

நாட்டின் சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு மட்டுமே மது அருந்துவதற்கு அனுமதி வழங்கப்படும் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது துபாயில் தங்கும் விசா உள்ள நபர்களுக்கு மதுபானம் அருந்த லைசென்ஸ் இருந்தால் மட்டுமே மது அருந்த முடியும் என்பது சட்டமாகும்.
Reporting by Kuwait tamil pasanga team.




Add your comments to துபாயில் சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளுக்கு மது அருந்த இலவச அனுமதி லைசென்ஸ்: I

« PREV
NEXT »