குவைத் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் Mina Abdullah பகுதியில் நடந்த சோதனையில் பலரை போலீசார் கைது செய்தனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
இதில் 60 பேர் சிவில் ஐடி உள்ளிட்டவை ஆவணங்கள் எதுவும் இன்றியும்,3 பேர் காலாவதி விசாவுடனும்,8 பேர் கள்ள சாராய வழக்கிலும்,8 பேர் தலைமறைவு வாழக்கில் தேடப்பட்டவர்கள் என்று பலரை கைது செய்தனர்.மேலும் 8 பாட்டில்கள் மதுபானமும் பறிமுதல் செய்யப்பட்டது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
குவைத் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக வரும் நாட்களில் இந்த சோதனைகள் கடுமையாக தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.