BREAKING NEWS
latest

Wednesday, July 10, 2019

குவைத் உள்துறை அமைச்சக அறிவிப்பு(Moi) விசா மாற்றம் & விசா காலாவதி நேரத்தில் ஓட்டுநர் உரிமமும் ரத்தாகும்:


குவைத் உள்துறை அமைச்சக அறிவிப்பு(Moi) விசா மாற்றம் & விசா காலாவதி நேரத்தில் ஓட்டுநர் உரிமமும் ரத்தாகும்:
குவைத்தில் உள்துறை அமைச்சகம் அறிவிப்பு நீங்கள் விசா மாற்றம் செய்தலோ அல்லது உங்கள் விசா காலாவதியானலோ உங்கள் ஓட்டுநர் உரிமம் ரத்தாகும் என்ற தலைப்பில் பல தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது பல பார்த்தீர்கள். இது என்னா இப்படி பலருக்கு புரியாமலும் இருக்கலாம்.
அது வெற ஒன்றும் இல்லை சில மாதங்களுக்கு முன்பே இந்த சட்டம் அமலுக்கு வந்ததுதான் பலருக்கு தொடர்ந்து சந்தேகம் நிலவுவதால் குவைத் உள்துறை அமைச்சகம் மீண்டும் அதை தெளிவுபடுத்தியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு ஓட்டுநர் உரிமம்  பெறுவதற்கு அமைச்சரவை புதிய ஒப்புதல்ஆணை எண் 5598/2014  படி குவைத் குடிமக்கள் அல்லாத வெளிநாட்டு சாதரணமான ஒருவர் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் இரண்டு வருடங்களாவது குவைத் நாட்டில் சட்டபூர்வமாக தங்கியிருக்க வேண்டும்,மாத சம்பளம் 600 தினாருக்கு குறையாத இருக்கு வேண்டும் மற்றும் பல்கலைக்கழக பட்டமும் பெற்றிக்க வேண்டும் என்பதே அந்த உத்தரவு.இப்படிப்பட்ட அரசு மற்றும் தனியார் துறையில் வேலை செய்யும் நபர்கள் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு தகுதியானவர்கள் ஆவார்கள்.மேலும் 
(3 specified categories) சில குறிப்பிட்ட துறையில் வேலை செய்யும் நபர்களுக்கு மேல் குறிப்பிட்ட வரையறையில் இருந்து (சலுகை)விலக்கு அளிக்கப்படும்.

மேலும் தற்போதுள்ள சட்டபடி உங்கள் விசா காலாவதி ஆகும் போது ஓட்டுநர் உரிமமும் காலாவதி ஆகும்.விசா புதுப்பித்தல் செய்ய பிறகு ஓட்டுநர் உரிமமும் புதுப்பித்தல் செய்ய வேண்டும்.மேலும் சில துறைகளும் விசா மாறுதல்(வேலை மாறுதல்)(Visa Transfer) பெறும் போது அந்த வேலைக்கு ஓட்டுநர் உரிமம் தேவையில்லை என்றால் ஓட்டுநர் உரிமம் தானாகவே ரத்தாகும்.அந்த துறைக்கு மீண்டும் ஓட்டுநர் உரிமம் தேவையென்றால் உள்துறை அமைச்சகத்தின் சம்மந்தப்பட்ட துறையில் தகுந்த விளக்கமளித்து உரிமம் பெறுவதற்கு வாய்ப்புள்ளது.

மேலும் ஓட்டுநர் உரிமம் உள்ள நபர்கள் விசா ரத்து செய்துவிட்டு தாயகம் செல்லும்போது அந்த நபர்களின் ஓட்டுநர் உரிமமும் ரத்தாகும்.மீண்டும் வேலைக்கு வரும் துறைகளில் ஓட்டுநர் உரிமம் தேவையென்றால் மீண்டும் வழங்கப்படும்.

மேலும் அந்த செய்தியில் நிறை இடம்பெற்றுள்ளது அது குவைத்தில் உள்ள குவைத் மக்கள் சம்மந்தப்பட்ட ஓட்டுநர் உரிமங்கள் பெறுவதற்காக விதிமுறைகள் ஆகும்.(Non-Kuwaiti and Bedoun husbands of Kuwaiti women)அதாவது கலப்பு திருமணம், கணவனை இழந்த பெண்கள் ஓட்டுநர் உரிமம் பெறுவது உள்ளிட்ட நிறைய பட்டியல் அதில் இடம்பெற்றுள்ளது.

நமது மக்களுக்கு தேவையானது இங்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

Reporting by Kuwait tamil pasanga team.

Add your comments to குவைத் உள்துறை அமைச்சக அறிவிப்பு(Moi) விசா மாற்றம் & விசா காலாவதி நேரத்தில் ஓட்டுநர் உரிமமும் ரத்தாகும்:

« PREV
NEXT »