சவுதியில் தாயகத்திலிருந்து வரும் வீட்டுப் பணிப்பெண்களை அழைத்து செல்ல முதலாளி ( Sponsor) வரவேண்டும் என்ற சட்டத்தில் மாற்றம்:
சவுதியில் விடுமுறையில் தாயகம் சென்ற வீட்டுத் பணிப்பெண்கள் விடுமுறைக்கு பிறகு சவுதி திரும்பினால் அவர்களை விமான நிலையத்திற்கு வந்து அழைத்துச் செல்ல முதலாளி ( Sponsor) வரவேண்டும், அல்லது அவர் எழுத்துப் பூர்வமாக அனுமதி வழங்கி சவுதி குடிமகன் வரவேண்டும். அவர்களுக்கு மட்டுமே பணிப்பெண்களை அழைத்துச் செல்ல அனுமதி உண்டு இது தற்போது நடைமுறையில் உள்ளது சட்டமாகும்.
வீட்டுப் பணிப்பெண்களின் பாதுகாப்பு கருதி இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது. முதலாளி ( Sponsor) வரவில்லை என்றால் அந்த பெண்களை உரிய நபர் வரும் வரையில் தற்காலிக தங்கும் குடியிருப்பில் தங்க வைப்பார்கள்
இந்த சட்டத்தில் ஜூலை_15 2019 முதல் மாற்றம் வருகிறது.அதாவது ஜூலை 15 முதல் வீட்டுத் பணிப்பெண்கள் விமான நிலையத்தை விட்டு வெளியேற தடையிருக்காது என்று சவுதி தொழிற்துறை அமைச்சகம் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக வரும் வீட்டுத் தொழிலாளர் பெண்களை சம்மந்தப்பட்ட ஏஜென்சி விமான நிலையத்தில் வந்து அழைத்துச் சென்று சம்மந்தப்பட்ட Sponsor-ரிடம் ஒப்படைப்பது வழக்கம்.
மேல் குறிப்பிட்ட புதிய சட்டம் சோதனை அடிப்படையில் சவுதியின் ரியாத் King Khalid விமான நிலையத்தில் வரும் வீட்டுத் தொழிலாளர் பணிப்பெண்களுக்கு மட்டுமே வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால் சவுதியிலுள்ள மற்ற விமான நிலையங்களுக்கு இந்த சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று தொழிலாளர் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Reporting by Kuwait tamil pasanga team.