அமீரகத்தில் Sponsorship விசாவில் தங்கியுள்ள,ஆண்களுக்கு வேலை செய்ய அனுமதி புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது:
அமீரகத்தில் இனிமுதல் மனைவியின் Sponsorshipயில் தங்கியுள்ள கணவன்மார்கள் மற்றும் பெற்றோரின் Sponsorshipயில் தங்கியுள்ள 21 வயது கடந்த இளைஞர்களுக்கு வேலை செய்ய அனுமதி வழங்கும் தொழில்விசா(Work permit) வழங்கப்படும் என்று அமீரகத்தின் வழங்கப்படும் புதிய வசதியை அறிவித்துள்ளது.இதையடுத்து குடும்ப விசாவில் அமீரகத்தில் தங்கியுள்ள இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நபர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான அதிகாரப்பூர்வ செய்தியை அமீரகத்தின் தொழிலாளர் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
தற்போது வரையில் கணவரின் Sponsorship விசாவில் அமீரகத்தில் தங்கியுள்ள மனைவிக்கு மட்டுமே அமீரகத்தில் வேலை செய்ய அனுமதி வழங்கும் தொழில்விசா(Work permit) வழங்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. அதுவும் விசாவில் Not for Work என்று குறிப்பிட்டிருந்தாலும்,தொழிலாளர் துறை அமைச்சகத்தின் சில கம்பெனிகளுக்கு வழங்கும் சிறப்பு அனுமதி பெற்று மட்டுமே பெண்கள் வேலை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் பெண்களின் Sponsorship விசாவில் அமீரகத்தில் தங்கியுள்ள ஆண்களுக்கு தொழிலாளர் சட்டபடி வேலை செய்ய அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேல் குறிப்பிட்ட புதிய சட்டத்தின் அடிப்படையில் மனைவியின் Sponsorship விசாவில் அமீரகத்தில் தங்கியுள்ள கணவன்மார்களை வேலைக்கு அனுமதிக்க கம்பெனிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது என்றும் செய்திக்குறிப்பில் தொழிலாளர் துறை அமைச்சர் நாசர்-பின்-சானி வெளியிட்டுள்ள அறிக்கையில்
தெரிவித்துள்ளது.
தெரிவித்துள்ளது.
உத்தரவு வெளியான நிலையில், சட்டப்படி வேலை செய்வதற்கு தொழிலாளர்களுக்கு தொழில்விசா(Work permit) வழங்குவது துவங்கியுள்ளது என்று அவர் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்.இதன் மூலம் அமீரகத்தில் தங்கியுள்ள குடும்பத்தினரின் பொருளாதார நிலையை உயர்த்துவது மட்டுமே நோக்கம் என்று தொழிலாளர் துறை அமைச்சக அதிகாரி செய்யது அஹ்மத் தெரிவித்துள்ளார்.மேலும் தொழில்விசா(Work permit) பெறுவதற்கு கட்டவேண்டிய விசா கட்டணத்தை Sponsorship செலுத்த வேண்டும் என்றும், இப்படி வேலை செய்யும் தொழிலாளர்கள் வேறு துறைகளில் விசா மாற்றம் செய்ய எந்த தடையும் இருக்காது என்றும் தொழிலாளர் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் அமீரகத்தில் வேலை செய்யும் வெளிநாட்டு தொழிலாளர்கள் குடும்ப விசா எடுப்பதற்கு தேவையான மாத சம்பளத்தின் அதிகபட்சமாக உச்ச வரம்பு குறைக்கப்பட்டு புதிய அறிவிப்பை அரசு வெளியிட்டது.இந்த அறிவிப்பு அமீரகத்தில் வாழும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டினருக்கு பெரிதும் பயனுள்ள அறிவிப்பதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இந்த புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அங்கு தங்கியுள்ள தொழிலாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்
Reporting by Kuwait tamil pasanga team.