குவைத்தில் உள்ள வெளிநாட்டவர்கள் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை இனிமுதல் புதிதாக குடும்ப(FamilyVisa) விசாவில் அழைத்துவர முடியாது:
குவைத்தில் உள்ள வெளிநாட்டவர் 500 தினாருக்கு மேல் மாதசம்பளம் இருந்தால் மட்டுமே, புதிதாக அவர்களே Sponsorship-ஆக (சொந்த ஸ்பான்சர்ஷிப்பில்) தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளை உடன் தங்க வைக்க முடியும். கடந்த வாரம் வரையில் இந்த சம்பள வரம்பு 450 தினார் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் குவைத்தில் தற்போது குடும்பத்துடன் 450 தினாரில் விசா பெற்ற வசித்து வரும் நபர்கள் விசா புதுப்பித்தல் செய்ய முடியும்.
ஆனால் மேல்குறிப்பிட்ட இரண்டு தரப்பினரும் ஆம்பு வைக்கும் புதிய செய்தி வெளியாகியுள்ளது. அதாவது 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை இனிமுதல் புதிதாக குடும்ப விசாவில் உள்ளவர்கள் தாயகத்தில் இருந்து அழைத்துவர முடியாது என்ற செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும் 18 வயதுக்கு மேற்பட்ட குவைத்தில் குடும்ப விசாவில் உள்ள வெளிநாட்டினர் சிறுவர்களுக்கான விசா புதுப்பித்தலையும் அதிகாரிகள் தடை செய்துள்ளனர். குவைத் உள்துறை அமைச்சகத்தின் புதிய முடிவின் அடிப்படையில் இந்த புதிய விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. எனவே புதிய உத்தரவுபடி, 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு குடும்ப(FamilyVisa) விசாவில் குவைத்தில் வர விசா கிடைக்காது.
மேலும் குவைத்தில் குடும்ப விசா தங்கியுள்ள
18 வயது நிரம்பிய ஆண் குழந்தைகளுக்கும் விசா புதுப்பித்தல் மறுக்கப்படும். ஆனால் உள்ளூர்(குவைத்தில்) உள்ள பல்கலைக்கழகங்கள் எதாவது ஒன்றில் அவர்கள் ஒரு மாணவர் என்பதை நிரூபிக்கும் ஆவணத்தை சமர்பித்தால் இகாமா(விசா) புதுப்பித்து வழங்கபடும் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தவிர சம்பள வரம்பு 450 தினாரில் இருந்து 500 தினராக உயர்துவதற்கு முன்பு குடும்ப விசா பெற்று குவைத்தில் தங்கி வருகிற குடும்ப தலைவரின் வேலை(Profession) ஆகியவை ஆய்வு செய்த பிறகு மட்டுமே விசா புதுப்பித்தல் செய்து வழங்கபடும் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.

மேலும் சிரியா உட்பட ஆறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் குடும்ப உறுப்பினர்களை குடும்ப (Family Viesa) விசாக்களில் அழைத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற மற்றொரு செய்தியும் வெளியாகியுள்ளது.இது தொடர்பாக செய்தியை குவைத் அரபு செய்தி தளங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளது.
குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்.
மொழி பெயர்ப்பு Reporting by: Kuwait tamil pasanga Team
Note: News Don't copy without page Team permission Only Share & Support