குவைத்தில் சிவில் ஐடி பிழை திருத்தங்கள் உள்ளிட்ட பல ஆன்லைன் சேவைகள் ஆகஸ்டு 14-ற்கு பிறகு மட்டுமே மீண்டும் செய்ய முடியும்:
குவைத்தின் Public Authority for Civil Information (PACI) எனப்படும் உள்துறை அமைச்சகத்தின் கீழு இயங்கி வரும் சிவில் ஐடி அலுவலகங்கள் வழியாக வழங்கப்பட்டு வருகிற சிவில் ஐடி சம்மந்தப்பட்ட கணினி தானியங்கி சேவைகள் உள்ளிட்ட பல சேவைகள் ஒரு வாரத்திற்கு பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது.
எனவே வருகின்ற ஆகஸ்டு 14 வரையில் இந்த ஆன்லைன் சேவைகள் பெறமுடியாது.
எனவே ஆகஸ்டு 14 ற்கு பிறகு மீண்டும்
சேவைகள் செயல்பாட்டிற்கு வரும் என்றும் குவைத்தின் பிரபல தினசரி பத்திரிகை Al-Qabas செய்தி வெளியிட்டுள்ளது.இந்த தற்காலிக தடைமூலம் பிறப்பு தேதி திருத்தங்கள்,விசா புதிதாக அடித்துள்ள குவைத் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் யாரும் புதிய சிவில் ஐடியை புதுப்பித்தல் செய்யும் தானியங்கி சேவையை இந்த நாட்களில் பெற முடியாது.
மேலும் புதிதாக பெறப்பட்ட சிவில் ஐடியில் பெயரில் பலருக்கும் பிழை ஏற்பட்ட வண்ணம் உள்ளது.இந்த பெயர் திருத்தம் ஆன்லைன் சேவையும் மேற்குறிப்பிட்ட நாட்களில் பெற முடியாது. இதுதவிர
வீட்டுத் தொழிலாளர்கள் விசா தொடர்பான ஆன்லைன் பதிவுகள் மற்றும் குடும்ப விசா
(dependent visa) உள்ளிட்ட ஆன்லைன் சேவையும் இந்த நாட்களில் பெற முடியாது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டுத் தொழிலாளர்கள் விசா தொடர்பான ஆன்லைன் பதிவுகள் மற்றும் குடும்ப விசா
(dependent visa) உள்ளிட்ட ஆன்லைன் சேவையும் இந்த நாட்களில் பெற முடியாது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reporting by Kuwait tamil pasanga Team
News Don't copy without page Team permission
News Don't copy without page Team permission