சவுதியில் மக்காவில் விபத்து 2 இந்தியர்கள் உள்பட 3 பேர் பலி; கவலைக்கிடமான நிலையில் 3 பேர் உட்பட 15 பேர் காயமடைந்தனர்:
சவுதி மக்காவில் நேற்று மதியம் 1 மணியளவில் இந்த துயரமான சம்பவம் நடந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த துயரமான விபத்தில் இறந்தவர்களில் இரண்டு இந்திய ஹஜ் யாத்ரீகர்கள் ஜார்கண்ட் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது,மூன்றாவது நபர் எகிப்து நபர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் 15 பேர் காயமடைந்தனர் என்றும், அவர்கள் அனைவரும் மக்கா அல்நூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் முதல்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.இதில் கேரளாவை சேர்ந்த ஆயிஷா(வயது-58) மற்றும் ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வலர் இக்பால் ஆகியோர் அடங்குவர் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. காயமடைந்த நபர்களில், சவுதி குடிமகன் உட்பட 3 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மேலும் செய்திகள் தெரிவிக்கின்றன.
விபத்தானது மக்கா ஹால் அருகே நடந்தது என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஸ் ஹஜ் யாத்ரீகர்களுக்கு சென்று கொண்டிருந்தது என்றும், திடிரென
கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று தங்கள் ஹஜ் கடன்களை நிறைவு செய்து திரும்பிக் கொண்டிருந்த யாத்ரீகர்கள் நடந்து சென்றுக் கொண்டிருந்தவர்கள் இடையே புகுந்து மோதிவிட்டு கார் ஒன்றியின் மீது மோதி நின்றது என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை துவங்கியுள்ளது

குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்.
Reporting by: Kuwait tamil pasanga Team