குவைத்தின் சுகாதாரத் துறையில் 2575 பேரை பணியமர்த்த நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதில் முக்கியமாக 2000 செவிலியர்களுக்கு(Nursing) புதிதாக வேலை கிடைக்கும், மேலும் தொழில்நுட்ப வல்லுநர்கள்(Technicians) மற்றும் மருத்துவர்களை(Doctor)நியமிக்கவும் நிதி துறை அமைச்சகம் இறுதி ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த புதிய ஒப்புதல் மூலம் 2000 செவிலியர்களுக்கு, 575 தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் மற்றும் 680 மருத்துவர்களுக்கும் புதிய வேலைகளை வழங்கவும் இதற்காக 1,94,000 தினார் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நியமனங்கள் செய்வதற்கு ஏற்கனவே அமைச்சரவை மற்றும் சிவில் சர்வீஸ் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்டது.
குவைத்தில் நடப்பு நிதியாண்டில் சுகாதார அமைச்சில் உள்ள மருத்துவமனைகளின் வருவாய் இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. வருவாயின் அதிகரிப்பு முக்கிய காரணம் வெளிநாட்டினருக்கான சிகிச்சை கட்டணம் அதிகரிப்பதே ஆகும். மேலும் நடப்பு நிதியாண்டில், சுகாதார அமைச்சின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் இருந்து 45 லட்சம் தினார்கள் வருமானம் அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது. இதை தவிர வெளிநாட்டவர்களிடமிருந்து ஆண்டுக்கு 108 மில்லியன் டாலர் சுகாதார காப்பீட்டு( Medical Insurance) கட்டணத்தையும் எதிர்பாராத அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்தில் அரசு மருத்துவமனைகளில் செவிலியர்கள் உட்பட,பல்வேறு பிரிவுகளில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை செய்து வருகின்றனர். கடந்த சில வருடங்களாக அரசு துறையில் செவிலியர் தேர்வுகள் சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்த புதிய அறிவிப்பு இந்தியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Reporting by Kuwait tamil pasanga Team
News Don't copy without page Team permission