குவைத்தில் இந்தியர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக குத்தி சாய்த்தனர் என்று செய்தியை Al-Rai தினசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் நடத்த சில நிமிடங்களில் அந்த வழியாக சென்ற குவைத் குடிமகன் ஒருவர் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய இந்தியரை கண்டார் என்றும்,
இதையடுத்து அந்த குவைத்தி உடனடியாக உள்துறை அமைச்சகத்தின் அவசர எண்ணிக்கு அழைத்து புகார் செய்தார் என்றும், தகவல் கிடைத்தது உடனடியாக குற்றம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் உயிருக்கு போராடிய இந்தியருக்கு
முதலுதவி வழங்கி, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். ஆனால் மருத்துவர்கள் எவ்வளவு போராடியும் அவரை காப்பாற்ற முடியவில்லை என்று செய்திகள் தெரிகிறது.
மேலும் உயிர்போகும் நேரத்தில் தன்னைத் தாக்கியதாக நான்கு ஆசியா நாட்டவர்கள் பெயர்களை அந்த நபர் பொலிசாருக்கு வழங்கியதாக Al-Anba தினசரி நாளிதழும் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களுக்கு எதிராக பயண தடை விதித்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த இடம், இறந்த இந்தியர் மற்றும் 4 குற்றவாளிகள் குறித்த எந்தவொரு கூடுதல் தகவலையும் இரண்டு நாளிதழ்களும் வெளியிடவில்லை. இதுகுறித்து கூடுதல் தகவல்கள் தெரிந்தவர்கள் Comment அடைப்பில் கருத்துகளை பதிவு செய்யவும்.
Reporting by Kuwait tamil pasanga Team