குவைத்தின் PACI( Public Authority for Civil Information) இது குறித்து புள்ளிவிவரங்கள்
வெளியிட்டுள்ளது. ஆகஸ்டு 17 வரையில் உள்ள கணக்குப்படி குவைத்தின் மொத்த மக்கள் தொகை 48,29,507 பேர் ஆவார்கள். இதில் 14,19,355 மட்டுமே குவைத் குடிமக்கள், மீதி 34,10,112 பேர் வேலை வாய்ப்புகள் அடிப்படையில் குவைத்தில் தங்கியிருந்த வேலை செய்யும் இந்தியா,இலங்கை, பிலிப்பைன்ஸ், எகிப்து, வங்காளதேசம், பாகிஸ்தான், உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் ஆவார்கள்.
மேலும் சதவீதம் அடிப்படையில் 29 % சதவீதம் மட்டுமே குவைத் குடிமக்கள் ,71% சதவீதம் பேர் வெளிநாட்டினர். 1961 யில் குவைத்திற்கு சுதந்திரம் கிடைக்கும் போது மக்கள் தொகை வெறும் 3 லட்சம் மட்டுமே. வெளிநாட்டு தொழிலாளர்களில் தற்போது வரையில் தொடர்ந்து இந்தியர்கள் முதலிடத்தில்
உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Reporting by Kuwait tamil pasanga Team