குவைத்தில் ஹஜ் பண்டிகை தினங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் குவைத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 79 ற்கும் மேற்பட்ட வெளிநாட்டு நபர்களை பல்வேறு பிரிவுகளில் கைது செய்தனர்.
இதில் 61 நபர்கள் தொழிலாளர் சட்டத்தை மீறிய குற்றத்திற்காகவும், 9 பேர் வீட்டுத் தொழிலாளர்கள் விசாவில் வந்து வேறு வேலைகளில் ஈடுபட்ட நபர்கள்,9 பேர் சுற்றுலா விசாவில் வந்து விசா காலாவதிக்கு பிறகும் சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருந்த என்று 79 ற்கும் மேற்பட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நபர்கள் கைது செய்யப்பட்டு நாடுகடத்தல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.