குவைத்தில் வேலைக்கு அழைத்து வரப்பட்ட இந்திய பெண்மணி சவுதியில் 8 வருடங்களாக தவித்த அவலம்:
குவைத்தில் அரபி( Sponsor) ஒருவர் மூலம் கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் வேலைக்கு அழைத்துவரப்பட்ட இந்திய, ஆந்திரா மாநிலம், ஹைதராபாத் பகுதியை சேர்ந்தவர் வெங்கட் ரமணம்மா என்ற பெண்மணி. பின்னர் அரபி அவரை இங்கிருந்து சவுதிக்கு அவரை அழைத்துச் சென்று அவருடைய உறவினர் ஒரு வீட்டில் வேலைக்கு விட்டுள்ளார்.
இதையடுத்து வந்த நாளிலிருந்து ரமணம்மா பல்வேறு கொடுமைகள், துன்புறுத்தல்களை அனுபவித்தார், மேலும் சம்பளமும் வழங்கவில்லை. இதையடுத்து ஒருகடத்தில் அங்கிருந்து தப்பி சமூக ஆர்வலர்கள் உதவியுடன் சவுதி தமாமில் உள்ள பெண்கள் பாதுகாப்பு மையத்திற்கு சென்று தன்னுடைய உண்மை நிலைமையை கூறி உதவியை நாடினார்.
இதையடுத்து இந்திய தூதரக அதிகாரிகள், சவுதி அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முயற்சி மூலம் சம்மந்தப்பட்ட அரபி( Sponsor) யின் வங்கி கணக்குகள் உள்ளிட்ட, அனைத்து ஆன்லைன் செயல்பாடுகள் அதிகாரிகளால் முடக்கப்பட்டது.
இதை தொடர்ந்து சம்மந்தப்பட்ட அரபி( Sponsor) சமரசம் செய்ய ஒத்துக்கொண்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து கடந்த 8 வருடங்களுக்கான வழங்கப்படாத சம்பளம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளை அதிகாரிகள் வாங்கி வழங்கிய நிலையில், சவுதியில் இருந்து விமானம் மூலம் தாயகம் திரும்பினார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
இதையடுத்து சமூக ஆர்வலர்கள் மற்றும் தனக்கு உதவிய அனைவரும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார்
Reporting by Kuwait tamil pasanga Team