BREAKING NEWS
latest

Friday, August 16, 2019

குவைத்தில் வாழ்க்கையின் கடைசி வரையில் சென்று போராடி வெற்றி கண்ட இந்தியர் நெகிழ்ச்சி பதிவு:


குவைத்தில் வாழ்க்கையின் கடைசி வரையில் சென்று போராடி வெற்றி கண்ட இந்தியர் நெகிழ்ச்சி பதிவு:

குவைத்தில் பல கனவுகளுடன் வேலைக்கு வந்தவர் பிலால் உசேன்.இந்தியாவில் கொல்கத்தாவை சேர்ந்தவர் இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக குவைத் நாட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.கம்பனி உயர் அதிகாரிகள் உட்பட 5 பேர் கொண்ட கும்பல் தன்னை தாக்கியதாக கூறி உடல் பலத்த காயங்களோடு தூதரகத்திற்க்கு வந்தார்.அவரால் நடக்க முடியாத சூழ்நிலை இருந்தால் ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இவரை தாக்கியவர்களுக்கு எதிராக காவல்துறையில் வழக்கு தொடர்ந்து,இரவு பகல் பாராமல் காவல்நிலையத்திற்க்கு  சென்று தொடர்ந்து போராடினோம். தொழிலாளர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தோம். கம்பெனி இவர் மேல் வழக்கு போட்டது. பல பிரச்னைகளை சந்தித்து தொழிலாளர் நீதிமன்றம் மூலம் தீர்வும் நீதியும் பெற்று தாயகம் திரும்பினார். கடைசி வரை மனம் தளராமல் போராடினர் பிலால். இவை அனைத்திற்கும் தொடக்கம் முதல் இறுதிவரை இவர் சமூக ஆர்வலரும், மனித உரிமை ஆணைய பிரதிநிதியுமான ஆல்வின் உடன் இருந்தார்.

இதுகுறித்து ஆல்வின் அவர்கள்  கூறியதாவது:

நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் உசேன் கடைசியில் என்னை கட்டிப்பிடித்து அழுது நீங்கள் இல்லை என்றால் நான் என் ஊருக்கு போகவே முடியாது. என் வாழ்க்கையில் ஒரு மிக பெரிய வெற்றியை தேடிதந்தீர்கள். கடவுள் உங்களுக்கு நிறைய ஆசிர்வாதங்களை கொடுத்து உள்ளார்.என் வாழ்க்கையில்  நான் மறக்க முடியாத நபர் நீங்கள் என்று கூறினார். பல பிரச்னைகளை  சந்தித்து அதில் வெற்றி பெறுகிறேன் என்றால்,இவர்களை போன்றோரின் உண்மையான மனம் திறந்த பாராட்டுக்கள் மற்றும் பிரார்த்தனைகள் என்பது தெரிவித்தார். புகைப்படத்தில் இடது உசேன் வலது சமூக ஆர்வலர் ஆல்வின்.

Reporting by Kuwait tamil pasanga Team

Add your comments to குவைத்தில் வாழ்க்கையின் கடைசி வரையில் சென்று போராடி வெற்றி கண்ட இந்தியர் நெகிழ்ச்சி பதிவு:

« PREV
NEXT »