குவைத்தில் வீட்டு டிரைவர் பணிக்காக கடந்த 20 மாதங்களுக்கு முன்பு வந்த தஞ்சாவூர் கரந்தையை சேர்ந்த பஞ்சநாதம் என்பவரின் மகன் சங்கர்(வயது-50). பணியில் இருக்கும் போது தீடிரென நெஞ்சுவலி வர உடனடியாக பர்வானியாவில் உள்ள பெரிய மருத்துவமனையில் கடந்த( 5.08.2019) அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து அறுவைச் சிகிச்சைக்காக சபா மருத்துமனையின் இருதய அறுவை சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார். இவருக்கு மனைவி மற்றும் மகனும்,மகளும் உள்ளனர்.
அறுவைச் சிகிச்சையின் போது இதயத்தில் ஏற்பட்ட அடைப்புகளை நீக்க இரண்டு Heart Block Stand வைத்துள்ளார்கள். அதன்பிறகு குடும்ப சூழ்நிலை காரணமாக மீண்டும் பணிக்கு சென்றார். இந்நிலையில் நெஞ்சுவலி ஏற்பட்டு தற்போது அதே மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் மீண்டும் ண்டும் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது. இந்த சூழலிலும் அவருடைய முதலாளி அவரை தாயகம் அனுப்ப மறுக்கிறார்கள் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். பதட்டத்தில் இருக்கும் அவர் தணக்கு எதாவது நேரும் முன்னர்
மனைவி மற்றும் குழந்தைகள் ஒருமுறையாவது பார்க்க மீட்டு தாயகம் அனுப்ப வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கு குவைத்தில் இந்திய தூதரகம் அதிகாரிகள் உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அவருடைய WhatsApp தொடர்பு எண்: +919443704533