BREAKING NEWS
latest

Saturday, August 24, 2019

பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமீரகத்தின் அபுதாபி விமானநிலையத்தில் நேற்று இரவு வந்தடைந்தனர் உற்சாக வரவேற்பு:


பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமீரகத்தின் அபுதாபி விமானநிலையத்தில் நேற்று இரவு வந்தடைந்தனர் உற்சாக வரவேற்பு:

அரசு முறை பயணமாக ஐக்கிய அமீரகம் வந்துள்ள பிரதமர் மோடிக்கு, அபுதாபி விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரான்சு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு 5 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, முதலாவதாக நேற்று முன்தினம் பிரான்சு வந்தடைந்தார். முதல் கட்டமாக இருநாடுகளின் தூதரக அதிகாரிகளின் கூட்டம் நடந்தது. அதன் பின், பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்து இருநாடுகளின்  நட்புறவு, அதனை மேலும் வலுப்படுத்துதல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது இருநாடுகளுக்கும் இடையே 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்த நிலையில், பிரான்ஸ் பயணத்தை முடித்து  அங்கிருந்து புறப்பட்ட அவர், தனி விமானம் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தை நேற்றிரவு வந்தடைந்தார். அபுதாபி நிர்வாக விவகார ஆணையத்தின் தலைவர் கல்தூன் கலீஃபா அல் முபாரக், அபுதாபி உயர் அதிகாரிகளும், இந்திய தூதரகத்தின் அதிகாரிகள் பிரதமர் மோடியை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து, இன்று இருநாட்டு உறவுகள் குறித்தும், பிராந்திய மற்றும் சர்வதேச விஷயங்கள் குறித்தும் மோடி மற்றும்  அபுதாபி இளவரசர் முகமது பின் சையது தலைமையில் இருநாட்டு தலைவர்கள் மற்றும்  அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர்.

மேலும் இந்திய பிரதமர் மோடியின் இந்த சுற்றுப் பயணத்தின் போது, அந்நாட்டில் பணமில்லா பரிவர்த்தனையை எளிதில் மேற்கொள்ளும் வகையில் ரூபே அட்டையின் செயல்பாட்டினை தொடங்கி வைக்கிறார். மகாத்மா காந்தியின் 150-வது நினைவு தினத்தை கொண்டாடும் வகையில் அவரது உருவம் பொறித்த சிறப்பு தபால் தலையை அபுதாபி இளவரசருடன் இணைந்து மோடி வெளியிடுகிறார். பயணத்தின் இறுதியாக ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ஷேக் ஜாயேத் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுகிறது.

இதனையடுத்து, இந்தியாவிற்கு சுதந்திரதின கிடைத்தது 70 வருடங்களுக்கு கடந்த நிலையத்தில் முதலில் முறையாக ஒரு இந்திய பிரதமர் பஹ்ரைன் செல்கிறார். பஹ்ரைன் செல்லும் பிரதமர், பஹ்ரைன் பட்டத்து இளவரசர் ஷேக் கலிபா பின் சல்மான் அல் கலிபாவுடன் இருதரப்பு மற்றும் பிராந்திய, சர்வதேச நலன்கள் குறித்து விவாதிப்பார். அந்நாட்டிலும் பணமில்லா பரிவர்த்தனையை எளிதில் மேற்கொள்ளும் வகையில் ரூபே அட்டையின் செயல்பாட்டினை தொடங்கி வைக்கிறார்.

மேலும் அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்,பிறகு  அங்குள்ள மனாமாவில் புனரமைக்கப்பட்டு உள்ள கிருஷ்ணர் கோவிலை பிரதமர் மோடி திறந்து வைப்பார். இந்த பயணத்தின் போது பஹ்ரைன் மன்னர் ஷேக் ஹமத் பின் இசா அல் கலிபா, பிரதமர் மோடிக்கு இரவு விருந்து அளிக்கிறார்.பின்னர், 25ம் தேதி மீண்டும் பிரான்ஸ் செல்லும் மோடி, 25 மற்றும் 26 தேதிகளில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் சிறப்பு பிரதிநிதியாக கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Reporting by Kuwait tamil pasanga Team.




Add your comments to பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமீரகத்தின் அபுதாபி விமானநிலையத்தில் நேற்று இரவு வந்தடைந்தனர் உற்சாக வரவேற்பு:

« PREV
NEXT »