குடும்ப விசாவும் சம்பள வரம்பு உயர்த்தப்பட்ட நிலையத்தில்; விசா கட்டணங்களை உயர்த்தவும்
சம்மந்தப்பட்ட துறை திட்டமிட்டு வருகிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.அடுத்த வருடம் விசா கட்டணங்களில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்று சில குவைத் செய்தி தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் முக்கியமாக வெளிநாட்டினர் வருகையை கட்டுப்படுத்தி மக்கள் தொகையை குறைக்கும் வகையிலும், புதிதாக வேலைக்கு தேவையான தொழிலாளர்களை மட்டுமே வேலைக்கு அழைத்துவர அனுமதி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிகிறது.
கடந்த வாரம் புதிதாக வரும் நபர்களுக்கு குடும்ப விசாவுக்கு சம்பள வரம்பு 450 இருந்து 500 தினாராக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வளைகுடா நாடுகளில் குறைந்த விசா கட்டணம் வசூலிக்கப்படுவது குவைத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.
Reopening by: Kuwait tamil pasanga Team