குவைத்தில் கடந்த 10 ஆண்டுகளாக குவைத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் வசிக்கும் தேவதாஸ்,மார்ச் 10, 2019 அன்று திடிரென நிலை குலைந்து தரையில் விழுந்தார்,அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக ஜாபிரியா முபாரக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஐ.சி.யுவில் ஒரு மாதம், பின்னர் அறை எண் 14 இல் உள்ள மருத்துவ வார்டு 19-யில் கடந்த 6 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த விபத்தால் மேலும்
இவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது அதற்க்கும் சிகிச்சை பெற்று வருகிறார்.தூதரகம், அமைப்பு மற்றும் சக ஊழியர்களின் உதவியுடன் அவரை வீட்டிற்கு அனுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று மாலையில் எயர்லைன்ஸ் விமானம் மூலம் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருடைய வீடு வரையில் அழைத்துச் செல்ல இலவச ஆம்புலன்ஸ் சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
(விமானத்தில் படுக்க வைத்துள்ள காட்சி)
இதற்கு பக்கபலமாக குவைத் மனித உரிமை ஆணைய சமுக ஆர்வலர் ஆல்வின் ஜோஸ் அவர்கள் இருந்தார்.கடந்த ஆறு மாதங்களாக அவருக்கு தேவையான தன்னால் முடிந்த அளவு உதவிகள் செய்தார். சிகிச்சையில் இருந்தவருக்கு தாயகம் செல்ல பயணதடை இருந்தது.பயண தடை நீக்கி தாயகம் அனுப்புவதற்கு தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுத்தார்.
குவைத்தில் இயங்கி வருகிற கேரளா நண்பர்கள் அமைப்பான "குவைத் யாத்ரா" என்ற ஓட்டுநர் அமைப்பினர் தங்களால் முடிந்த நிதியுதவியை செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளனர்.
மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை உள்ளடக்கிய இந்த குடும்பம் நீண்ட காலமாக வாடகை வீடுகளில் வசித்து வருகிறது.இந்த குடும்பத்தின் ஒரே பாதுகாப்பாக தேவதாஸ் இருந்தார்.இரண்டு குழந்தைகள் படிப்பு மற்றும் குடும்ப தேவைகள் மேற்கொண்டுள்ள மருத்துவ பராமரிப்புக்காக பணம் செலுத்த வேண்டும்.நிதி நெருக்கடியுள்ளார். உதவ முடிந்த நண்பர்கள் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தொலைபேசி எண் +91 73739 34688
Reporting by Kuwait tamil pasanga team.