BREAKING NEWS
latest

Tuesday, August 6, 2019

குவைத்தில் தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இனிமுதல் உள்நுழைவு கட்டணம் வசூலிக்ககூடாது:


குவைத்தில் தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார்  ஆரம்ப சுகாதார நிலையங்களில் இனிமுதல் உள்நுழைவு கட்டணம் வசூலிக்ககூடாது:

குவைத்திலுள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் ஆரம்ப சுகாதார  நிலையங்களில் இனிமுதல் உள்நுழைவு கட்டணம்(File Opening fees) வசூலிக்ககூடாது என்றும்,அது ரத்து செய்யப்பட்டது என்று குவைத் சுகாதாரத் துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.உள்நுழைவு கட்டணம் என்பது நோயாளி எந்தவொரு சிகிச்சையும் எடுக்காத நிலையில் சிகிச்சைக்கு முன்பு வசூலிக்கும் கட்டணமாகும்.

குவைத் சுகாதாரத் துறை அமைச்சகத்தின்
தனியார் மருத்துவ துறைக்கான தலைமை அதிகாரி பாத்திமா-அல்-நஜார்  இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. குவைத்திலுள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் சார்பில் இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதிய உத்தரவை பின்பற்றாத தனியார் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். உள்நுழைவு கட்டணம்(File Opening fees) வசூலிப்பதை நிறுத்த வேண்டுமென்று  அரசிடம் கடந்த பல வருடங்களாக பாராளுமன்றத்தில் உறுப்பினர் பலர் தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்தது குறிப்பிடத்தக்கது.
பல வருடங்களுக்கு பிறகு கடந்த வருடம் குவைத்திலுள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டணம் உயர்த்தப்பட்ட குறிப்பிடத்தக்கது. 

இதை காரணம் காட்டி சில தனியார் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்கள் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி நோயாளிகளிடம் கொள்ளை லாபம் ஈட்டி வருகிறார்கள்.
இவ்வளவு இருந்ததும் நோயாளி எந்தவொரு சிகிச்சையும் பெறுவதற்கு முன்பே உள்நுழைவு கட்டணம்(File Opening fees) என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறது.பல மருத்துவமனைகளும்
1 முதல் 5 தினார்கள் வரையில் சாதாரணமாக வசூலிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது.இதுவே தற்போது ரத்து செய்து சுகாதார துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் சில மருத்துவமனைகள் உள்நுழைவு கட்டணமாக(File Opening fees) பெரும் தொகையை வசூலிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.குவைத் சுகாதார துறை அமைச்சகத்தின் புதிய உத்தரவு குவைத்தில் குறைந்த வருமானத்தில் வேலை செய்துவரும் தொழிலாளர்களுக்கு பெரும்  உதவியாக இருக்கும்.

Reporting by : Kuwait tamil pasanga Team

Note: News Don't Copy without page Team permission.








Add your comments to குவைத்தில் தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இனிமுதல் உள்நுழைவு கட்டணம் வசூலிக்ககூடாது:

« PREV
NEXT »